Friday 15 May 2009

திரைப்பார்வை - “சர்வம்”...




தயாரிப்பு : K.கருணாமூர்த்தி, C.அருண்பாண்டியன்.
இசை : யுவன்ஷங்கர்ராஜா.
ஒளிப்பதிவு : நீரவ்ஷா.
படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்.
பாடல்வரிகள் : பா.விஜய்.
கதை, இயக்கம் : விஷ்ணுவர்தன்.

ஹீரோ ஆர்யா, ஒரு ஆர்க்கிடெக்ட்.
படம் தொடங்கியதுமே ஆர்யாவுக்கு ஒரு பாட்டு, இளையராஜா பாடுகிறார்.
என்ன கொடுமையோ ??
சம்பந்தமே இல்லாமல் ஒரு பாட்டு.

கார் ரேஸிங் போட்டியில் ஹீரோயின் த்ரிஷாவைக் காண்கிறார் ஹீரோ.
கண்டதும் காதல் வர ஹீரோயினை துரத்துகிறார்.
த்ரிஷா ஒரு Pediatric Surgeon. த்ரிஷா சேவை செய்யும் மருத்துவமனைக்கு சென்று த்ரிஷாவை சந்திக்கிறார்.

ஒருநாள் த்ரிஷாவை காதலிப்பதாக சொல்லிவிடுகிறார்.
வழக்கம்போல ஹீரோயின் கொஞ்சம் இழுத்துப்பிடிக்கிறார், அப்புறம் ஓகே சொல்லிவிடுகிறார்.

ஆர்யா, த்ரிஷா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கு.
ஆர்யாவும், த்ரிஷாவும் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது வீதியில் ஒரு கம்பத்தில் மாட்டிக் கொண்டிருந்த பட்டம் அறுந்து கீழேவிழ அதிலுள்ள நூல் த்ரிஷாவின் கழுத்தை இறுக்கி த்ரிஷா பலியாகிறாராம்.

மருத்துவமனைக்கு த்ரிஷாவைக் கொண்டுபோயும் காப்பாற்ற முடியவில்லை.
அப்போது இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு த்ரிஷாவின் இதயம் பொருத்தப்படுகிறது.

த்ரிஷாவின் இதயம் பொருத்தப்பட்ட சிறுவன் இமான், அவன் அப்பா நெளஷாட் (இவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை).
இந்த நெளஷாட் ஒருமுறை தன் வண்டியால் ஒரு பெண், ஒரு குழந்தையை இடித்து கொன்றுவிடுகிறார்.
அந்த பெண்ணின் கணவன் தான் வில்லன்.
தன் குழந்தையை பிரிந்து தான் கஷ்டப்படும் வலியை நெளஷாட்டும் உணர வேண்டும் என்பதற்காக இமானை கொல்ல வேண்டும் என தேடுகிறான் வில்லன்.

தன் காதலியின் இதயம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்ற உண்மையை அறியும் ஆர்யா இமானை தேடி சென்று கண்டுபிடித்து விடுகிறாராம்.
ஆர்யாவுக்கு இமானை கொல்ல ஒருத்தன் அலைந்து கொண்டு இருப்பது தெரிந்து விட இமானை தன்னோடு அழைத்துக் கொண்டு போய் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்.
கடைசியில் வில்லன் இமானை கொல்கிறானா அல்லது ஆர்யா இமானை காப்பாற்றுகிறாரா என்பது தான் மீதிக் கதை.

கதை ஏற்கனவே பலமுறை பார்த்த மாதிரி இருந்தாலும் ஆர்யா, த்ரிஷா ரொமான்ஸ் காட்சிகள் புதுமையாக இருக்கு.
ஆர்யா சிறப்பாக நடித்திருக்கிறார்.
வழக்கம் போல ஹீரோயினுக்கு நடிக்க வாய்ப்பேயில்லை.

பெரிய கூட்டணியோடு தனக்கு வந்த “ரோபோ” பட வாய்ப்பை இந்தப் படத்துக்காக மறுத்த ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா சிறப்பாக தன் பங்கை செய்திருக்கிறார்.
அருமையான லொகேஷன்ஸ்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
பாடல்கள் பார்க்கும் படியாக செய்திருக்கிறார்.

யுவன் இசையில் பாடல்கள் மோசமாக இல்லை.
“சிறகுகள் வந்தது...” பாடல் அருமையாக இருந்தது.
பாடல் வரிகள் மனதில் ஒட்டவில்லை.
ஆனால் என்ன சொன்னாலும் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் யுவன்.
பின்னணி இசை படத்திற்கு ஒரு பலம் என்று சொல்ல வேண்டும்.

முழுப் படத்திலும் எங்கும் சலிப்புத் தட்டவேயில்லை.
திரைக்கதையை அதற்கேற்ற விதமாக அமைத்த இயக்குனர் விஷ்ணுவர்தனை பாராட்ட வேண்டும்.

கலை இயக்குனர் யார் என்று தெரியவில்லை.
அருமையான ரசனை அவருக்கு..
செட்கள் எல்லாம் அருமை...

மொத்தத்தில் “சர்வம்” சகலமும் நிறைந்த படம்.
ரொமான்ஸ், சண்டை, செண்டிமென்ட், நகைச்சுவை எல்லாம் அளவாக இருக்கிறது.

தியேட்டரில் போய் பாக்கலாம்.
.
திரைப்பார்வை - “சர்வம்”...SocialTwist Tell-a-Friend

53 . பின்னூட்டங்கள்:

butterfly Surya on 15 May 2009 at 16:21 said...

வழக்கமான மசாலாதான்.

பகிர்விற்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் on 15 May 2009 at 16:24 said...

என்னப்பா இது.. என்னைய முந்திட்டீங்களா? படம் நம்பி பார்க்கலாம் இல்ல?

வேத்தியன் on 15 May 2009 at 16:29 said...

வண்ணத்துபூச்சியார் said...
வழக்கமான மசாலாதான்.

பகிர்விற்கு நன்றி//

ஆமாங்க...
ஆனா பாக்க கொஞ்சம் நல்லா இருக்கும்...
வருகைக்கு நன்றி...

வேத்தியன் on 15 May 2009 at 16:30 said...

கார்த்திகைப் பாண்டியன் said...
என்னப்பா இது.. என்னைய முந்திட்டீங்களா? படம் நம்பி பார்க்கலாம் இல்ல?//

பதிவு எழுத எதுவும் மேட்டர் இல்லையேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்..
வந்துச்சு சர்வம்..
:-)

பாக்கலாம்...

ஆ.சுதா on 15 May 2009 at 16:49 said...

நண்பா படத்தை நல்ல அலசியிருக்கீங்க....

பாடல் வரிகள் மனதில் ஒட்டவில்லை.
(இது பா.விஜை பாட்டு ஒட்டேவே ஒட்டாது நான்ஸ்டிக்)

முழுப் படத்திலும் எங்கும் சலிப்புத் தட்டவேயில்லை.
திரைக்கதையை அதற்கேற்ற விதமாக அமைத்த இயக்குனர் விஷ்ணுவர்தனை பாராட்ட வேண்டும்.

இதற்காகவே பார்க்களாம் நண்பா!!

shabi on 15 May 2009 at 16:59 said...

னவ்ஸாட் கேரக்டரில் நடிட்டவர் பெயர் இண்ட்ரஜித் நடிகர் பிரிட்விராஜ் அண்ணனாம்/குழ்ட்ை விஸ்னுவர்டனின் மகனாம்

Subash on 15 May 2009 at 17:08 said...

பகிர்விற்கு மிக்க நன்றிகள் நண்பா.
அப்ப படத்த பார்த்துடவேண்டியதுதா !!!

SUBBU on 15 May 2009 at 17:17 said...

அன்னே மத்தத விடுங்க, த்ரிஷா எப்படின்னே? :))))))) :)))))))) :))))))))

mayavi on 15 May 2009 at 17:36 said...

Story of english movie 21grams... Benicio del Toro kills a father and his 2 daughters by accident, Sean penn gets the heart of the father.

The wife now wants to kill Benicio del Toro who killed her husband and children.

sean penn helps the mother to kill Benicio del Toro.

does this look similar to Sarvam... :) :) :)

வந்தியத்தேவன் on 15 May 2009 at 17:49 said...

திரிஷா ஆர்யா காதல் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கின்றது பின்பாதி சுத்த போர்.

SUBBU on 15 May 2009 at 17:56 said...

வந்தியத்தேவன், அப்ப படம் வாந்தின்னு சொல்லுங்க :)))))))))

தேவன் மாயம் on 15 May 2009 at 18:17 said...

வழக்கம் போல் ஒரு தமிழ்ப் படம்தான்....................ஒகே ஒகே...

தேவன் மாயம் on 15 May 2009 at 18:18 said...

வேத்தி சூப்பர் ஃபாஸ்ட்!!

Anbu on 15 May 2009 at 18:19 said...

நன்னாயிருக்கு விமர்சனம்

தேவன் மாயம் on 15 May 2009 at 18:20 said...

பெரிய கூட்டணியோடு தனக்கு வந்த “ரோபோ” பட வாய்ப்பை இந்தப் படத்துக்காக மறுத்த ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா சிறப்பாக தன் பங்கை செய்திருக்கிறார்.
அருமையான லொகேஷன்ஸ்./////////

அப்படியா? பரவாயில்லையே!!

வந்தியத்தேவன் on 15 May 2009 at 18:27 said...

//SUBBU said...
வந்தியத்தேவன், அப்ப படம் வாந்தின்னு சொல்லுங்க :)))))))))//

ஆமாம் இரண்டாம் பாதி போர் போர் போர்

யுவன் இசை நீரவ் ஷா ஒளிப்பதிவு அழகு பல்லி திரிஷாவையே அழகாகக் காட்டியிருக்கின்றார். மற்றும்படி திரைக்கதை சறுக்கல் ஒரே கல்லில் இரண்டுகதை.

Anonymous said...

நண்பா படத்தை நல்ல அலசியிருக்கீங்க....

ஆதவா on 15 May 2009 at 20:13 said...

எப்படிங்க இப்படி???/ படத்தை பார்த்தாச்சா??
விமர்சனம் நறுக்கென்று அருமையாக இருந்தது. வழக்கம்போன்ற கதை என்றாலும் திரைக்கதையில் ஏதும் வித்தியாசம் இருக்கும் போலத்தான் தெரிகிறது..

ஏற்கனவே 'கண்' காதல் 'நாக்கு' காதல் 'பேச்சு'காதல் எல்லாம் வந்தாச்சு... இப்ப இதயக்காதல்....

விமர்சனம் அருமை வேத்தியரே!!!
ஓட்டும் போட்டாச்சு!!!

மயிலாடுதுறை சிவா on 15 May 2009 at 20:35 said...

ஹாலிவுட் "21 Grams" பல காட்சிகள் காப்பி அடித்தது போல் உள்ளதே?

படம் தேறுமா தேறதா?

மயிலாடுதுறை சிவா...

கலையரசன் on 15 May 2009 at 20:42 said...

விமர்சனம் பக்கா! பக்கா!!

இதுபோல 7 Pounds அப்படின்னு ஒரு படம் உண்டு வில் சுமித் நடிச்சது. ஒரு சில மாற்றங்கள் தவிர்த்து.

குப்பன்.யாஹூ on 15 May 2009 at 23:11 said...

its difficult to imagine aarya with Trisha.

but good review., thanks for sharing. better to avoid the movie, knowing this boring story line

வேத்தியன் on 16 May 2009 at 09:18 said...

@ ஆ.முத்துராமலிங்கம்...

ஓ பா.விஜய் வரிகள் நான்ஸ்டிக்கோ??
நல்ல கற்பனை தான்..
:-)

படம் பார்க்கலாம்..

வேத்தியன் on 16 May 2009 at 09:19 said...

@ shabi...

தகவலுக்கு நன்றிங்க...

வேத்தியன் on 16 May 2009 at 09:19 said...

@ Subash...

பார்க்கலாம் படம்..
தப்பில்லை...

வேத்தியன் on 16 May 2009 at 09:20 said...

@ SUBBU...

ஆஹா நீங்க நம்மாளா???
நீரவ்ஷாவைத் தான் பாராட்ட வேண்டும்..
ஒன்னுமில்லாத த்ரிஷாவையே அழகா காட்டியிருக்கார் மனுசர்...

வேத்தியன் on 16 May 2009 at 09:22 said...

@ mayavi...

i haven't heard about this english movie "21 grams"...
first i wanna watch it and then only compare right..

anyway thanks for e info man...

வேத்தியன் on 16 May 2009 at 09:23 said...

@ வந்தியத்தேவன்...

பின்பாதி போரா???
எனக்கு பரவாயில்லை மாதிரி இருந்தது...
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான ரசனை..

வேத்தியன் on 16 May 2009 at 09:24 said...

@ thevanmayam...

ரெண்டு நாளா பதிவு போட ஒன்னுமேயில்லையேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்..
கிடைச்சுது சர்வம்..
:-)

வேத்தியன் on 16 May 2009 at 09:24 said...

@ Anbu...

நன்றிப்பா...

வேத்தியன் on 16 May 2009 at 09:25 said...

@ கடையம் ஆனந்த்...

நன்றி நண்பரே...

வேத்தியன் on 16 May 2009 at 09:26 said...

@ ஆதவா...

படம் பாக்கலாம் ஆதவா...

கொஞ்சம் வித்தியாசமான காட்சியமைப்புகள்...

ஓட்டுக்கும் வருகைக்கும் நன்றி...

வேத்தியன் on 16 May 2009 at 09:27 said...

@ மயிலாடுதுறை சிவா...

ஏற்கனவே ஒரு நண்பர் 21 grams பத்தி சொல்லியிருந்தார்..
நான் அந்தப் படம் பார்த்ததில்லை..
பார்த்துவிட்டு சொல்கிறேனே...

ஆனாலும் படம் பரவாயில்லை...

வேத்தியன் on 16 May 2009 at 09:28 said...

@ கலையரசன்...

நன்றி கலை...
7 pounds இதை விட வித்தியாசமானது..
அது போல இல்லை இந்தப் படம்...

வேத்தியன் on 16 May 2009 at 09:31 said...

@ குப்பன்_யாஹூ...

no mate, the romantic scenes they have shooted were very nice...
both aaryaa and trisha looks very beautiful.
all credits goes to cinematographor Neeravshaa...

better you go and see this movie atleast once..
:-)

anyway, thanks for your comment...

Revathyrkrishnan on 16 May 2009 at 09:48 said...

ஏதோ ரெண்டு மூணு படங்களோட கதைகளை கலந்து எழுதின மாதிரி தோணல?

வேத்தியன் on 16 May 2009 at 10:15 said...

@ reena...

அப்பிடித்தான் இருக்கு...

ஆனாலும் படம் பார்க்க கொஞ்சம் நல்லா இருக்கும்...

வினோத் கெளதம் on 16 May 2009 at 10:54 said...

நான் ட்ரைலர் பார்த்துவிட்டு கொஞ்சம் எதிர்ப்பார்த்த படம்..
விமர்சனம் அருமைங்க..

வேத்தியன் on 16 May 2009 at 13:34 said...

vinoth gowtham said...
நான் ட்ரைலர் பார்த்துவிட்டு கொஞ்சம் எதிர்ப்பார்த்த படம்..
விமர்சனம் அருமைங்க..//

மிக்க நன்றிங்க...

இளைய கவி on 16 May 2009 at 17:27 said...

ரொம்ப நல்லா இருக்கு

Vilvaraja Prashanthan on 16 May 2009 at 19:06 said...

பின்னனியில வார அந்த ராஜா சார்...பாட்டு எந்த படத்துல வந்தது ? please தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்த சொல்லுங்களேன் ...
prashanth.isc@gmail.com க்கு mail பன்னுங்க..

Vilvaraja Prashanthan on 16 May 2009 at 19:06 said...

பின்னனியில வார அந்த ராஜா சார்...பாட்டு எந்த படத்துல வந்தது ? please தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்த சொல்லுங்களேன் ...
prashanth.isc@gmail.com க்கு mail பன்னுங்க..

வேத்தியன் on 16 May 2009 at 21:40 said...

இளைய கவி said...
ரொம்ப நல்லா இருக்கு//

மிக்க நன்றி...

வேத்தியன் on 16 May 2009 at 21:41 said...

Vilvarasa Prashanthan said...
பின்னனியில வார அந்த ராஜா சார்...பாட்டு எந்த படத்துல வந்தது ? please தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்த சொல்லுங்களேன் ...
prashanth.isc@gmail.com க்கு mail பன்னுங்க..//

கண்டிப்பா மெயில் அனுப்புகிறேன்...

Poornima Saravana kumar on 17 May 2009 at 00:36 said...

கதை கொஞ்சம் பழைய ஸ்டைலில் இருக்கிற மாதிரி இருக்கே!

அ.மு.செய்யது on 17 May 2009 at 00:44 said...

என்னத்த சொல்ல !!!

உங்க விமர்சனம் நல்லா இருக்கு !!

ஆனா நான் இருக்க இடத்துல தமிழ்ப் படம் ரிலீஸாகாதே !!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!

வேத்தியன் on 17 May 2009 at 08:37 said...

Poornima Saravana kumar said...
கதை கொஞ்சம் பழைய ஸ்டைலில் இருக்கிற மாதிரி இருக்கே!//

ஆமாங்க...
ஆனா காட்சிகள் புதுசா இருக்கும்...

வேத்தியன் on 17 May 2009 at 08:38 said...

அ.மு.செய்யது said...
என்னத்த சொல்ல !!!

உங்க விமர்சனம் நல்லா இருக்கு !!

ஆனா நான் இருக்க இடத்துல தமிழ்ப் படம் ரிலீஸாகாதே !!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!//

ஐயையோ தமிழ் படம் வராதா???
அப்போ திருட்டு விசீடி தானா???
:-)

வேத்தியன் on 17 May 2009 at 08:38 said...

48

வேத்தியன் on 17 May 2009 at 08:39 said...

49

வேத்தியன் on 17 May 2009 at 08:39 said...

ரொம்ப நாளைக்கு அப்புறமா 50...
:-)

sankarkumar on 19 May 2009 at 20:09 said...

good review

வேத்தியன் on 19 May 2009 at 21:19 said...

sankarfilms said...
good review//

Thanks mate...

மேவி... on 20 May 2009 at 06:57 said...

ராஜாதி ராஜா யை விட சர்வம் பரவல......
ஒரு முறை பார்க்கலாம்

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.