இந்தப் படங்கள் அனைத்தும் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை...
இந்த உண்மையான படங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும், இதற்கு உடனடியாக இல்லையாயினும் எப்போதாவது ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகத் தருகிறேன்...
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கவிதையாகவே நான் பார்க்கிறேன்...
அதுவும் அந்த முதலாவது படமும் கடைசி இரு படங்களும் மிகவும் உருக்கம்...
அவர்கள் முகத்தில் தெரியும் அந்த ஏக்கம்..
விபரிக்க வார்த்தைகளேயில்லை...
என்று தான் ஒழியுமோ இந்த அவலம் ???
49 . பின்னூட்டங்கள்:
குழந்தைகளைக் கொண்டு வேலை வாங்க எப்படி இவர்களால் முடிகிறது?
இது இந்தியாவிலென்றால் குழந்தைகளை வேலைக்கமர்த்தும் தொழிற்சாலைகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்தானே? தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளில் இப்பொழுது சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதில்லையெனக் கேள்விப்பட்டேன். அது போல இவர்கள் நிலையும் மாறவேண்டும்.
வாழ்க்கை வலி வார்த்தைகள் இல்லாமல் இவர்கள் வாட்டதிலேயே...வலிக்கிறது ஏனோ இப்படி வலிக்கிறது....என் குழந்தைகளாய் முன் நிறுத்திக் கண்டேன்...வலி வலி.... நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்.....
உலகம் முழுவதும் உற்றுப்பார்க்க வேண்டிய விஷயம். எத்தனை கடுமையான சட்டங்கள் வந்தாலும் வறுமைக்கோட்டிற்கு மிகவும் கீழ் இருப்பவர்களின் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் இந்த அவல நிலை மாற வேண்டும். அதனால் இதை சட்டம் கொண்டு தடுக்க முடியாது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மாறவேண்டும். அது அரசால் முடியும். நிறைவேற்றுவதில் தான் குளறுபடி.
:-((
நல்ல முயற்சி வேத்தியன்.. படங்கள் கண்ணை கசக்கின்றது.
துயரம் தரும் படங்கள்.
வருத்தமளிக்கும் பதிவு..
உலகிலேயே கொடுமையான விஷயம் இளமையில் வறுமை தான்..
காலத்தின் கட்டாயம், வறுமையின் பிடியில் இந்த சிறுவர்களின் குடும்பம்,
அரசாங்கம் கடுமையான சட்டம் கொண்டுவந்தும் சிலபேர் குழந்தைகளை அவர்களின் வறுமையை சாதகமாக்கி வேலைக்கு அமர்த்தி கொழுத்துக்கிடக்கிறார்கள்...
முதளாலிகளை தண்டிக்கவேண்டும், பெற்றோர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே...
மனதை பிழிந்த பதிவு வேத்தியா
@ எம்.ரிஷான் ஷெரீப்...
நீங்கள் சொல்வது போல குறைந்திருந்தால் சந்தோஷம் தான் நண்பரே...
வருகைக்கு மிக்க நன்றி...
@ தமிழரசி...
வருகைக்கு மிக்க நன்றி...
குழந்தைத் தொழிலாளர்களுக்கென சட்டம் தீவிரப் படுத்தப் பட்டாலும் இன்னும் முழுமையாக அனைத்து இடங்களிலும் இந்த அவலம் ஒழிய வில்லை.
கார் கண்ணாடியில் ரோஜா பூக்களை ஏந்தி நிற்கும் சிறுமியின் படம் என் மனதை வெகுவாக
பாதித்து விட்டது.
@ S.A. நவாஸுதீன்...
சரியாக சொன்னீர்கள் தோழரே...
மிக்க நன்றி...
@ Subankan...
வருகைக்கு நன்றி...
@ ஆ.ஞானசேகரன்...
மிக்க நன்றி...
@ லோகு...
ஆமா லோகு...
வறுமையான குடும்பத்துல பிறந்தது அவங்களோட குத்தமா என்ன???
தண்டனையை மாத்திரம் தினமும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்...
@ அபுஅஃப்ஸர்...
//முதளாலிகளை தண்டிக்கவேண்டும், பெற்றோர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே...//
வழிமொழிகிறேன்...
மிக்க நன்றி...
@ அ.மு.செய்யது...
நன்றி நன்றி நண்பரே...
மனதை ரணம் கொள்ளச் செய்யும் படங்கள்.. பாடம் சொல்லி தரும் கல்லூரிகளில் கூட குழந்தை தொழிலாளர் உண்டு எனபது சோகமான உண்மை..
இவர்கள் நிலை மாறவேண்டும் வேத்தியன்
நெஞ்சை உலுக்கும் படங்கள்...
பதிவு மட்டும் போடாமல், எதாவது செய்யனும் தோழா..
மனதை சங்கடப் படவைக்கின்றன படங்கள். இந்த வலி எனக்குள்ளும் உண்டு.
கடைசிக்கு முதல் படம் கண்களை கலங்க வைத்தது.....
இவர்களெல்லாம் மிக மிக வேகமாக வளர்ந்து பெரியவர்களாக மாறிவிட வேண்டும் என்று பிரார்த்திப்பதை தவிர வேறு செய்வதற்கேதுமில்லை...
எட்டு வருடங்களுக்கு முன்னர், சென்னைக்குக் கிளம்ப கோயம்புத்தூர் ரயில்நிலையம் அருகே நானும் என் நண்பனும் ஒரு ஓட்டலில் அமர்ந்திருந்தோம்.. ஒரு பத்து அல்லது பன்னிரண்டு வயதுடைய சிறுவன் ஒரு டம்ளர் எடுத்து தண்ணீர் ஊற்ற வந்தான். எனக்கு ஆச்சரியம்தான்.. திருப்பூரில் மிகச் சிறுவயதுடையவர்கள் பணிக்குச் செல்வதில்லை... இங்கே எப்படி வைத்திருக்கிறார்கள் என்று அவனிடமே கேட்டேன்... சிவகாசியிலிருந்து (அதனருகே ஒரு கிராமமாம்) வீட்டை விட்டு ஓடிவந்தவனாம்....
பத்து வயதில் அப்படி என்ன நேர்ந்துவிட்டது அவனுக்கு??
சென்னை புதுப்பேட்டையில் ஒரு லாட்ஜ்.. அங்கே தங்கியிருக்கிறேன். என் வயதொத்த ஒருவன்... (அப்ப நமக்கு ரொம்ப சின்ன வயதுங்க...)அப்பொழுதுதான் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிவிட்டு லாட்ஜில் வேலை செய்தான்.. அவனிடம் பல கேள்விகள் கேட்டேன்.. ஓரளவு புத்திச்சாலித்தனமான, வாயாடியாக அவன் இருந்தான்... வீட்டை விட்டு ஓடிவந்தவந்தான் அவனும்...
வாழ்வில் மிக நெருக்கமாக, பழகினவரைப் போல..... இன்னும் உள்ளார்கள் வேத்தியன்... என் கண்ணுக்குத் தெரிந்து ஒரு சிறுவனை ஓரினச் சேர்க்கைக்காக அழைத்துச் சென்றான் ஒருவன்... வேத்தியன்.... பொதுவிலே சொல்ல முடியாத பல செயல்களையும் அதே சென்னையில்தான் நான் பார்த்தேன்....
குழந்தைத் தொழிலாளர்கள் என்பது கருவிலேயே நசுக்கப்படுவது... இந்த படங்களைக் கண்டதும் பலர் என் கண்ணுக்கு வந்து செல்கிறார்கள்
@ கார்த்திகைப் பாண்டியன்...
குழந்தைத் தொழிலாளர்கள் எங்கு இல்லை என்ற நிலை ஆகிவிட்டது...
வருத்தம் தான்...
@ sakthi...
அது தான் எல்லோருடைய விருப்பமும்...
@ கலையரசன்...
எனக்கும் விருப்பம் தான்...
ஆனா என்ன செய்வது??
குறிப்பா நம்ம தமிழனே ஒருத்தன் ஒன்னை தொடங்கினா இன்னொருத்தன் அதுக்கு எதிரா தொடங்குறான்..
:-)
@ ஆ.முத்துராமலிங்கம்...
இந்த வலி நிலமை புரிந்த சகலருக்கும் உண்டு...
@ புல்லட் பாண்டி...
நீங்கள் சொலவதும் சரிதான்...
நன்றி புல்லட்...
@ ஆதவா...
//பொதுவிலே சொல்ல முடியாத பல செயல்களையும் அதே சென்னையில்தான் நான் பார்த்தேன்//
இந்த அநியாயங்கள் சென்னையில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமாக பரவலாக நடந்து கொண்டே தான் இருக்கிறது நண்பா...
அவர்களை எல்லாம் வாயால் சொல்லி திருத்த முடியாது..
வேறு ஏதாவது புது வழி தான்..
குழந்தை தொழிலாளர்கள் உருவாவதற்கு காரணம் வறுமை மட்டுமல்ல, சில குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் இருப்பதில்லை. அல்லது அவர்களை படிப்பதை கவனிக்க, கண்காணிக்க அவர்களின் பெற்றோர்கள் தவறுவதும்தான். அவர்களும் படித்தவர்களாக இல்லாததும் ஒரு காரணமாகும். அத்தகைய குழந்தைகள் பணிக்கு நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள் என்பதும் உண்மை.சில குழந்தைகளை நான் விசாரித்ததில் நானறிந்தது.
@ குடந்தை அன்புமணி...
சரியாக சொன்னீர்கள்...
வருகைக்கு நன்றி...
எப்போதாவது ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகத் தருகிறேன்...
தீர்வு தீர்வு???
எவ்வளவு விஷயத்துக்குத்தான் தீர்வு காணமுடியும்
குழந்தைகளை குழந்தைகளாக நடத்த பெரியவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.
@ அமிர்தவர்ஷினி அம்மா...
நான் எப்பிடி சொல்லிக் கொடுப்பது???
இப்பிடி குழந்தைகளை வைத்து தொழில் நடத்துபவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தியில் உறைப்பதில்லை...
நீங்கள் கூறியதுபோல குழந்தை முகங்களின் ஏக்கம் மனத்தை மிகவும் வலிக்கச்செய்கிறது.
குழந்தை தொழிலார்கள் குறித்து பல சிக்கலான சட்டம் இருக்கிறது.....
அதையெல்லாம் நெறி படுத்தினால் தான் உண்டு விடிவு
குழந்தைத் தொழிலாளர்கள் கட்டாயம் ஒழிக்கப்படவேண்டிய விசயம்.
அனைவருடைய மனதையும் பாதிக்கும் விசயம்!
இன்று ஒவ்வொரு நாட்டிலும் நல்ல நிலையில் உழைக்கின்ற ஒவ்வொருவரும் இவ்வாறு சிறு வயதிலேயே கல்வியை தொலைத்துவிட்டு வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் ஒரு சிறுவனுக்காவது அவன்/அவள் தனது கல்வியையாவது தொடர்வதற்குரிய ஒரு சிறியளவு உதவு தொகையேனும் இல்லாவிட்டால் எதாவது நலத் திட்டங்களாவது புரிவார்களாயின் அவர்கள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு படிப்பார்கள் என்பது என் எண்ணம். எங்களுக்கும் நிட்சயமாக மனதுக்கு ஒரு சந்தோஷமாக இருக்கும் நாங்கள் மனிதர்களாக பிறந்ததற்கு ஏதாவது ஒன்று செய்திருக்கின்றோம் என்று.
எதாவது இச் சமுதாயத்திற்கு நான் செய்தே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் வறுமை காரணமாக படிக்க ஆசை இருந்தும் படிப்பை தொடர முடியாமல் இவ்வாறு வேலைக்கு தள்ளப்படும் சிறுவர்களுக்கு தங்களது சம்பளத்தில் இருந்து அவர்களது கல்விக்கு தேவையான ஒரு சிறிய அளவு உதவி தொகை கொடுத்து அவர்களது கல்விக்கு துணை புரிவார்களாயின் இவ்வாறான குழந்தை தொழிலார்களது எண்ணிக்கையையாவது பெருமளவில் குறைக்கலாம்.
இப் படங்களை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கவலையாக இருகிகின்றது.
///முதலாளிகளை தண்டிக்க வேண்டும், பெற்றோர்களும் தண்டிக்க வேண்டியவர்களே/// உண்மை தான் அஃபுஅப்ஸர்... ஆனால் துரதிர்ஸ்டம் என்னவென்றால் தண்டிக்கும் அதிகாரம் கொண்ட பலர் முதலாளிகளாக இருப்பதுதான்.
///குழந்தைகளை குழந்தைகளாக நடத்த பெரியவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்///... உண்மைதான் அமிர்தவர்ஷிணி அம்மா...
சில அம்மாக்களே பிள்ளையை விரும்பி வேலைக்கனுப்பும் கொடுமை, வறிய நாடுகளில் இன்னமும் இருக்கிறது. சிறீலங்காவில் அகதிகளாய் வந்த ஒரு குடும்பத்தின் தலைவி எங்கள் வீடு வந்து தனது பிள்ளைக்கு (அப்போ அவனுக்கு 11 வயது) வேலை கேட்டார். அப்பாவின் எதிர்ப்பை மீறி அம்மா அந்தப் பையனை வேலைக்கு சேர்த்தார். அம்மாவிடம் சண்டை போட்டேன்... அப்போ அம்மா சொன்னார், பாடசாலை நேரத்தின் பின் தானே வேலை செய்யப்போகிறான் செய்யட்டுமே என்று. இருந்தும் என்னை விட 5 வயது இளையவனான அவன் எங்கள் வீட்டுத்தோட்டத்தில் தண்ணிபாய்ச்சியது மனதைக்குத்த அவனோடு சேர்ந்து நானும் உழைத்தேன், அம்மா மனத்தையும் மாற்றினேன். அதற்காக் எல்லா முதலாளிகளும் இப்படி மாறுவார்கள் என்று சொல்ல வரவில்லை நான். ஏனென்றால் அந்தப்பையன் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் வேறு இடங்களில் வேலை செய்து முழுநேரக் கூலித்தொழிலாளி ஆகிவிட்டிருந்தான் வீட்டின் வறுமை காரணமாக.படிப்பை முற்றாக நிறுத்தி விட்டார்கள். சிறீலங்காவில் 12ம் வகுப்புவரை கல்வி இலவசம். வருடத்துக்கு 3 முறை 20 ரூபா படி வசதிகள் சேவைகள் கட்டணம் என்று வருடத்துக்கு 60 ரூபா அறவிடுவார்கள். (2005 வரை அதுதான் நிலமை. இப்போ எவ்வளவு என்று தெரியாது). மிஞ்சி மிஞ்சிப் போனால் வருடத்துக்கு 250- 400 ரூபாய் போதும் பாடசாலைக்கு. அங்கேயே வசதியில்லை என்று படிப்பை நிறுத்துகிறார்கள் எனில், கல்வி வியாபார மயமாக்கப்பட்ட இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது ஆச்சரியமில்லை.
யாழினி கூறியது போல நலத்திட்டங்களை அமுல்படுத்தலாம் தான். ஒரு சின்னப் பிரச்சினை. ஒரு பாடசாலையின் பழைய மாணவர்கள் (மறுபடியும் சிறீலங்கா) வெளிநாடுகளிலிருந்து, 100 வறிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வருடா வருடம் ரூ. 10000 கிடைக்குமாறு ஒரு வங்கியில் கணக்கும் எற்படுத்தி ஒரு நல்ல நலத்திட்டம் கொண்டு வந்தார்கள். இந்த 100 மாணவர்கள் சுழற்சி முறையில் தெரிந்தெடுக்கப்பட்டு உதவிப்பணம் வழங்கும் பொறுப்பு சிறீலங்காவிலேயே வாழும் அந்தப் பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்ட குழுவுக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து பணமும் நேரத்துக்கு அனுப்பப்பட்டது. தற்செயலாக நாடு வந்த பணம் அனுப்பும் ஒரு கனவான், உதவி பெறும் மாணவனை சந்தித்த போது ஒரு விஷயம் கேள்விப்பட்டார். அவர்களுக்கு உதவித்தொகையாக் வெறும் 6000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாயும், சில ஆசிரியர்களின் பிள்ளைகள் கூட (ஆசிரியர்களின் அடிமட்ட மாத சம்பளமே 8000 ரூபாய்) உதவித்தொகை பெறுவதாயும் அறிந்தார். வெறுத்துப்போய் பணம் வழங்கும் மற்றவர்களிடமும் இதை அவர் சொல்லப்போக அந்த உதவித்தொகை திட்டத்தையே கைவிட்டு விட்டனர். நல்ல நிலைமையில் இருக்கும் எல்லோராலும் உதவிகளை நேரடியாகச் செய்ய முடியாது. அதே போல் தரகர்கள் மூலம் உதவி செய்யும் போது முழுப்பணமும் சரியான இடத்தில் சேர்வதில்லை. ஊழல் மலிந்துவிட்ட இந்தியா போன்ற நாடுகளில் இந்த மாதிரியான நல்லெண்ண முயற்சிகள் வெறும் பகல் கனவாயே முடியும்.
@ மாதேவி...
எல்லோருக்கும் இந்த வருத்தம் தான்...
@ MayVee...
அதை நெறிப்படுத்த வேண்டியவர்கள் கடமையில் இருந்தும் கண்டுகொள்ளாமலிருப்பது தானே வருத்தமே...
@ thevanmayam...
வருகைக்கு நன்றி...
@ Keith Kumarasamy...
வருகைக்கு நன்றி...
வலிக்கும் உண்மைதான் வேத்தியன் சார்
@ குமரை நிலாவன்...
வாங்க நிலாவன் அண்ணா...
அப்புறம் அந்த சார் எல்லாம் வேணாமே...
:-)
எந்த ஊருல நடக்குது இந்த கொடுமை!
வால்பையன் said...
எந்த ஊருல நடக்குது இந்த கொடுமை!//
எந்த ஊர்லன்னு சரியா தெரியல...
ஆனா பொதுவா எல்லா இடங்களிலும் நடக்குது...
கண் கலங்கிடிச்சு - rasihan
இந்த நிலை மாறும் என்று எதிர்பாப்போம்
Post a Comment