Saturday, 30 May 2009

Captcha - சிறு விளக்கம்...


அதிகமான தளங்களில் நாம் நம்மை பதிவு செய்யும் பொழுது (Register) அந்த பக்கத்தை பூர்த்தி செய்வதற்கு முன் உறுதிப்படுத்த சில சொற்கள் அடங்கிய ஒரு படத்தைப் பார்த்து அதிலுள்ள எழுத்துக்களையோ அல்லது எண்களையோ தட்டச்சுவோம் அல்லவா????
அது தான் Captcha.


Captcha என்பது இணையம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ ஒரு கணனியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படும் ஒரு சொற்கள் சார்ந்த புகுதல் உள்ளீடாகும்.
ஒரு மனிதனால் தொடர்பு கொள்ளப்படுகின்றதா அல்லது ஒரு தானியங்கி வழியாக தொடர்பு கொள்ளப்படுகின்றதா என தெரிந்து கொள்ளும் முகமாக இதை பயன்படுத்துகிறார்கள்.
தானியங்கிகளின் செயல்களை தடை செய்யும் முகமாகவே இது நடைமுறைபடுத்தப்படுகிறது.
Captchaவின் பொதுவான வடிவமாக எழுத்துகள் அல்லது எண்கள் அடங்கிய ஒரு சிறு படத்தைப் பார்த்து பாவனையாளர் அதை டைப் பண்ன வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சில தளங்களில் நாம் Audio Captchaகளையும் பார்த்திருப்போம்...
ஏனெனில் இவை அமெரிக்கா, மற்றும் பிற ஆங்கில நாட்டு வல்லுனர்களால் நிறுவப்படுவதால் அவர்களின் வசனநடை தெரிந்தவர்களால் மட்டுமே அதை எதிர்கொள்ள முடியும்.
என்னைப் போன்ற Broken English கேஸ்களுக்கெல்லாம் அது லாயக்கில்லை.. :-)
‘Captcha' என்ற சொல் ‘Capture' என்ற சொல்லிலிருந்து வந்தது.


இந்த முறை முதன்முதலில் 2000ஆம் ஆண்டில் Carnegie Mellon Universityயின் Luis von Ahn, Manuel Blum, Nicholas J. Hopper என்பவர்களாலும் அப்போது IBMல் இருந்த John Langford என்பவராலும் அறிமுகப்படுத்தப்பட்டது.


இவ்வளவு காலமும் சாதாரண Captchaவாக இருந்த இந்த முறை இப்போது reCaptcha என அழைக்கப்படுகிறது.
reCaptcha எனப்படுவது, அதே Carnegie Mellon Universityஆல் விருத்தி செய்யப்பட்ட முறையாகும்.
அதாவது இந்த முறையால் பண்டைய புத்தகங்களை கணனி மயமாக்கும் முயற்சி நடைபெறுகிறது.


தற்போதைக்கு சில பழைய புத்தகங்களும் New York Timesஇன் சஞ்சிகைகளும் கணனி மயமாக்கப்பட்டு வருகிறதாம்.
இதில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் விளைவு.
பழைய புத்தகங்களை பாதுகாப்பதும் இணைய மோசடியை தடுப்பதும் ஒரே நேரத்தில் நடக்கிறது.


Captcha தேவைப்படும் தளங்களுக்கு இந்த reCaptcha சொற்கள் அடங்கிய Captchaகளை வழங்குகிறது.
உதாரணமாக ஒரு புத்தகத்தில் ‘jeyhd' என்ற சொல் இருந்தால் அந்த சொல்லை அப்பிடியே ஸ்கேன் செய்து அந்தப் படத்திற்குறிய இலக்கத்தை அந்த இடத்தில் கொடுத்துவிட்டு அந்த படத்தை Captchaவாக வெளியிடுவார்கள்.
அந்த குறிப்பிட்ட Captchaவை பாவிக்கும் 90 சதவீதமானவர்கள் அதை சரியாகவே அடிப்பார்கள்.
ஆக அதிகமானவர்களால் அடிக்கப்பட்ட சொல்லை தானாகவே அந்த புத்தகத்தின் கணனி வடிவத்தில் சேர்த்து விடுகிறதாம் அவர்களின் மென்பொருள்.
இதன்மூலம் ஒருநாளைக்கு சராசரியாக 160 புத்தகங்களை கணனி மயமாக்குகிறார்களாம். :-)


இந்த முறையைப் பற்றி தெரியாத காலத்திலேயே அதாவது 1997இல் Internet bots எனப்படும் தானியங்கிகள் மூலம் தங்கள் முகவரிகளை தேடற் பொறிகளில் (Search engines) இணைக்காமல் இருப்பதற்காக Andrei Broder, Martin Abadi, Krishna Bharat, Mark Lillibridge என்பவர்களால் பயன்படுத்தப்பட்டது.


ஆரம்ப காலங்களில் இருந்த Captcha இவ்வாறு தான் இருக்கும்.

ஆரம்ப கால Captchas.


பின்பு இதை கண்டுபிடிக்கும் வகையில் மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டனவாம்.
அதற்குப்பிறகு சாதாரண optical character recognition (OCR) மென்பொருட்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் தற்போது பாவனையிலுள்ள Captcha அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது பாவனையிலுள்ள reCaptchas.


தற்போது பிரபலமான தளங்களாகிய Facebook, Gmail, Yahoo, MSN, Twitter, StumbleUpon ஆகியவை இந்த reCaptcha முறையை பாவித்து வருகின்றன.


reCaptcha பற்றிய மேலதிக விபரங்களுக்கு (இந்த கட்டுரையை படித்து முடித்துவிட்டு...) இங்கே செல்லவும்.


இந்த முறையைப் பயன்படுத்தி தமிழ் தளங்களில் தமிழ் சொற்களாலான Captchaகளை பயன்படுத்தினால் என்னாகும் என்று யோசித்துப் பார்த்தேன்.
ஒன்னும் தோன்றவில்லை..


உங்களுக்கு ஏதாச்சும் தோன்றினால் அதை பின்னூட்டமாக தெரிவிக்கலாமே...
:-)


அன்புடன்,
Captcha - சிறு விளக்கம்...SocialTwist Tell-a-Friend

60 . பின்னூட்டங்கள்:

ஆ.முத்துராமலிங்கம் on 30 May 2009 at 12:07 said...

பின்னாடி வர்ரேன்னு சொல்ல இப்ப முன்னாடி வந்திருக்கே. (என்ன ரொம்ப கடிக்கிரேனொ... அப்புறம் வாரங்க)

லோகு on 30 May 2009 at 12:19 said...

உபயோகமான பதிவு தான்..

Anonymous said...

நல்ல பதிவு வேத்தியன் இதை பற்றி கருத்து சொல்லும் அளவு எனக்கு கணினி அறிந்தவள் இல்லை...ஆனால்...captcha... இதை கண்டுருக்கிறேன்....இப்ப இதைப் பற்றி அறிந்துக் கொண்டேன்...

vinoth gowtham on 30 May 2009 at 12:22 said...

எப்பா இவ்வளவு மேட்டர் இருக்கா இதுல..
ஆனா சில நேரங்களில் ரொம்ப குழப்பமான எழுத்துக்களில் தான் தெரிகின்றது..

புல்லட் பாண்டி on 30 May 2009 at 12:32 said...

very useful... thank you!

சுரேஷ் குமார் on 30 May 2009 at 12:39 said...

//
ஒரு மனிதனால் தொடர்பு கொள்ளப்படுகின்றதா அல்லது ஒரு தானியங்கி வழியாக தொடர்பு கொள்ளப்படுகின்றதா என தெரிந்து கொள்ளும் முகமாக இதை பயன்படுத்துகிறார்கள்.
//
கரீட்டு தலைவா..
நச்சுனு புரியராப்ல சொன்ன..
நன்று..

சுரேஷ் குமார் on 30 May 2009 at 12:42 said...

எனக்கு இப்போது கொடுக்கப்பட்டுள்ள பிராஜெட்டின் ஒரு பகுதியாக, எங்கள் பிராஜெக்டில் இந்த Captcha அமைக்கவேண்டிய வேலையும் என் தலையில் தான் கட்டப்பட்டுள்ளது.. இப்போதும் அதைத்தான் செய்துகொண்டு உள்ளேன்..

கவிதை காதலன் on 30 May 2009 at 12:55 said...

பயனுள்ள பதிவு.. எனக்கு ரொம்ப நாளா இதைப்பத்தி தெரிஞ்சுக்கனும்னு ஆசை. தேங்க்ஸ்

இராகவன் நைஜிரியா on 30 May 2009 at 13:15 said...

ரொம்ப நாளா நினைச்சுக்குவேன், இந்த வேர்ட் வெரிபிகேஷன் கொடுத்து சாவடிக்கிறாங்களே அப்படின்னு. இப்பத்தான் காரணம் புரிஞ்சது.

நன்றிகள் பல.

இராகவன் நைஜிரியா on 30 May 2009 at 13:16 said...

// சுரேஷ் குமார் said...

எனக்கு இப்போது கொடுக்கப்பட்டுள்ள பிராஜெட்டின் ஒரு பகுதியாக, எங்கள் பிராஜெக்டில் இந்த Captcha அமைக்கவேண்டிய வேலையும் என் தலையில் தான் கட்டப்பட்டுள்ளது.. இப்போதும் அதைத்தான் செய்துகொண்டு உள்ளேன்.. //

சரி... சரி... நீங்க ஆபிஸில் வேலைச் செய்கின்றீர்கள் என்பதை நாங்கள் நம்பிவிட்டோம்.

இராகவன் நைஜிரியா on 30 May 2009 at 13:17 said...

// ஆ.முத்துராமலிங்கம் said...

பின்னாடி வர்ரேன்னு சொல்ல இப்ப முன்னாடி வந்திருக்கே. (என்ன ரொம்ப கடிக்கிரேனொ... அப்புறம் வாரங்க)//

அதனே... அ. முத்துராமலிங்கம் வந்தபின்னாடிதானே ஆ வரணும்.

Suresh on 30 May 2009 at 13:53 said...

சூப்பர் மேட்டர் உங்க கைஎழுத்து அருமை :-)

S.A. நவாஸுதீன் on 30 May 2009 at 14:21 said...

‘Captcha' பற்றி நிறைய விஷயம் பண்ணி Capture இருக்கீங்க வேத்தியன்.
பயனுள்ள பதிவுகள் மட்டுமே கொடுப்பது என்று கங்கணம் கட்டிகொண்டிருப்பது தெரிகிறது.

கொஞ்சம் வித்தியாசமா comments போடும்போது Word Verification (Captcha)கொடுத்தால் (இந்த பதிவுக்கு மட்டும்) பொருத்தமா இருக்குமோ!

S.A. நவாஸுதீன் on 30 May 2009 at 14:22 said...

ஆனால் சில தளங்களில் நாம் Audio Captchaகளையும் பார்த்திருப்போம்...

இது எனக்கு புதிய தகவல். நன்றி வேத்தியன்

Rajeswari on 30 May 2009 at 14:53 said...

பயனுள்ள பதிவு..

//இந்த முறையைப் பயன்படுத்தி தமிழ் தளங்களில் தமிழ் சொற்களாலான Captchaகளை பயன்படுத்தினால் என்னாகும் என்று யோசித்துப் பார்த்தேன்.ஒன்னும் தோன்றவில்லை..//

அப்பொழுதும் தமிழ் அழகாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.ஆங்கிலத்தில் இருப்பது மாதிரி அஷ்டகோணலாக இருக்காது என்பது என் கருத்து..

ஆ.ஞானசேகரன் on 30 May 2009 at 16:46 said...

மிக்க நன்றி நண்பா..
இதுவரை தெரியாதது, தெரிந்துகொள்ள ஆசைப்பட்டது. பகிர்வுக்கு நன்றி நண்பா,...

Sukumar Swaminathan on 30 May 2009 at 17:56 said...

வாழ்த்துக்கள்... உங்களது இந்த பதிவு குட் ப்ளாக் ஆக யூத்புல் விகடனில் வெளிவந்திருக்கிறது....

வேத்தியன் on 30 May 2009 at 18:15 said...

ஆ.முத்துராமலிங்கம் said...
பின்னாடி வர்ரேன்னு சொல்ல இப்ப முன்னாடி வந்திருக்கே. (என்ன ரொம்ப கடிக்கிரேனொ... அப்புறம் வாரங்க)//

நீங்க வந்தா மட்டும் போதும்...
நீங்க வந்தா மட்டும் போதும்...
:-)

வேத்தியன் on 30 May 2009 at 18:15 said...

லோகு said...
உபயோகமான பதிவு தான்..//

மிக்க நன்றி லோகு...

வேத்தியன் on 30 May 2009 at 18:16 said...

தமிழரசி said...
நல்ல பதிவு வேத்தியன் இதை பற்றி கருத்து சொல்லும் அளவு எனக்கு கணினி அறிந்தவள் இல்லை...ஆனால்...captcha... இதை கண்டுருக்கிறேன்....இப்ப இதைப் பற்றி அறிந்துக் கொண்டேன்...//

வருகைக்கு நன்றி அக்கா...

வேத்தியன் on 30 May 2009 at 18:17 said...

vinoth gowtham said...
எப்பா இவ்வளவு மேட்டர் இருக்கா இதுல..
ஆனா சில நேரங்களில் ரொம்ப குழப்பமான எழுத்துக்களில் தான் தெரிகின்றது..//

ஆமாங்க...
சாதாரண optical character recognition மென்பொருட்களால் கண்டுபிடிக்க முடியாதபடியே உள்ளது...
:-)

வேத்தியன் on 30 May 2009 at 18:17 said...

புல்லட் பாண்டி said...
very useful... thank you!//

நன்றி புல்லட்...

வேத்தியன் on 30 May 2009 at 18:17 said...

சுரேஷ் குமார் said...
//
ஒரு மனிதனால் தொடர்பு கொள்ளப்படுகின்றதா அல்லது ஒரு தானியங்கி வழியாக தொடர்பு கொள்ளப்படுகின்றதா என தெரிந்து கொள்ளும் முகமாக இதை பயன்படுத்துகிறார்கள்.
//
கரீட்டு தலைவா..
நச்சுனு புரியராப்ல சொன்ன..
நன்று..//

நன்றி நன்றி...

வேத்தியன் on 30 May 2009 at 18:18 said...

கவிதை காதலன் said...
பயனுள்ள பதிவு.. எனக்கு ரொம்ப நாளா இதைப்பத்தி தெரிஞ்சுக்கனும்னு ஆசை. தேங்க்ஸ்//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 30 May 2009 at 18:18 said...

இராகவன் நைஜிரியா said...
ரொம்ப நாளா நினைச்சுக்குவேன், இந்த வேர்ட் வெரிபிகேஷன் கொடுத்து சாவடிக்கிறாங்களே அப்படின்னு. இப்பத்தான் காரணம் புரிஞ்சது.

நன்றிகள் பல.//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 30 May 2009 at 18:19 said...

Suresh said...
சூப்பர் மேட்டர் உங்க கைஎழுத்து அருமை :-)//

நன்றிங்க...
கூடிய சீக்கிரம் கையெழுத்தை தமிழ்லயே போடலாம்ன்னு இருக்கேன்...
:-)

வேத்தியன் on 30 May 2009 at 18:21 said...

S.A. நவாஸுதீன் said...
ஆனால் சில தளங்களில் நாம் Audio Captchaகளையும் பார்த்திருப்போம்...

இது எனக்கு புதிய தகவல். நன்றி வேத்தியன்//

இந்த தளம் போய் பாருங்கள், நேரமிருந்தால் மட்டும்...

recaptcha.net

வேத்தியன் on 30 May 2009 at 18:22 said...

Rajeswari said...
பயனுள்ள பதிவு..

//இந்த முறையைப் பயன்படுத்தி தமிழ் தளங்களில் தமிழ் சொற்களாலான Captchaகளை பயன்படுத்தினால் என்னாகும் என்று யோசித்துப் பார்த்தேன்.ஒன்னும் தோன்றவில்லை..//

அப்பொழுதும் தமிழ் அழகாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.ஆங்கிலத்தில் இருப்பது மாதிரி அஷ்டகோணலாக இருக்காது என்பது என் கருத்து..//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 30 May 2009 at 18:22 said...

ஆ.ஞானசேகரன் said...
மிக்க நன்றி நண்பா..
இதுவரை தெரியாதது, தெரிந்துகொள்ள ஆசைப்பட்டது. பகிர்வுக்கு நன்றி நண்பா,...//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 30 May 2009 at 18:24 said...

Sukumar Swaminathan said...
வாழ்த்துக்கள்... உங்களது இந்த பதிவு குட் ப்ளாக் ஆக யூத்புல் விகடனில் வெளிவந்திருக்கிறது....//

தகவலுக்கு நன்றிங்க...
போட்டு 3 மணிநேரம் தான் ஆவுது..
:-)

Vilvarasa Prashanthan on 30 May 2009 at 18:37 said...

நானும் ரொம்ப நாள அது எதுக்கு என்டுதான் ஜோசிச்சுகொண்டு இருந்தன் ... இப்பதான் புரியுது ... நன்றி வேதியன் ... புரிய வைச்சதுக்கு

பித்தன் on 30 May 2009 at 19:33 said...

நல்ல பதிவு...

கார்த்திகைப் பாண்டியன் on 30 May 2009 at 19:39 said...

எங்க இருந்துப்பா இதெல்லாம் பிடிக்கிறீங்க.. கொஞ்சம் உருப்புடியான விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.. நன்றி.

வேத்தியன் on 30 May 2009 at 19:45 said...

Vilvarasa Prashanthan said...
நானும் ரொம்ப நாள அது எதுக்கு என்டுதான் ஜோசிச்சுகொண்டு இருந்தன் ... இப்பதான் புரியுது ... நன்றி வேதியன் ... புரிய வைச்சதுக்கு//

வருகைக்கு நன்றி...

வேத்தியன் on 30 May 2009 at 19:46 said...

பித்தன் said...
நல்ல பதிவு...//

மிக்க நன்றிங்க...

இன்னொரு முக்கியமான விஷயம்..
அன்னைக்கு கேட்டிருந்தீங்க.. “எழுதுறது தமிழ்ல. கையெழுத்து போடுறது ஆங்கிலத்துலயான்னு...
கையெழுத்து இனி தமிழ்லயே இருக்கும்...
:-)

வேத்தியன் on 30 May 2009 at 19:47 said...

கார்த்திகைப் பாண்டியன் said...
எங்க இருந்துப்பா இதெல்லாம் பிடிக்கிறீங்க.. கொஞ்சம் உருப்புடியான விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.. நன்றி.//

நமக்கு கவிதை, கட்டுரைல்லாம் வாசிக்கிறதோட சரி..
எழுத வராது...
சின்ன வயசுல இருந்தே அறிவியல் விடயங்கள் இன்ட்ரஸ்ட்.
அதன் விளைவுகள் தான் இந்த அறிவியல் பதிவுகள்...
:-)

sakthi on 30 May 2009 at 20:02 said...

உங்கள் பதிவுகளை பத்தி கேள்விபட்டு இருக்கின்றேன் சில பதிவுகளை பார்த்திருக்கிறேன் இந்த அளவு கணினி பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை
பயனுள்ள பதிவு
வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் on 30 May 2009 at 20:35 said...

நல்ல பதிவு வேத்தியா, பகிர்வு

//Captcha என்பது இணையம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ ஒரு கணனியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படும் ஒரு சொற்கள் சார்ந்த புகுதல் உள்ளீடாகும்//

சரியான எளிமையான விளக்கம்

நன்றி வேத்தியா

கலையரசன் on 30 May 2009 at 20:56 said...

எளிமையான விளக்கம்.. எல்லோரும் அறிந்து கொள்ளும்படி பதிவிட்டமைக்கு!
OCR ல கூட கண்டுபிடிக்க முடியாது என்பதை இப்போதான் தெரிஞ்சிகிட்டேன்!

krish on 30 May 2009 at 21:02 said...

The term CAPTCHA is short for 'Completely Automated Public Turing test to tell Computers And humans Apart'
krish

thevanmayam on 30 May 2009 at 21:30 said...

விளக்கம் பிரமாதம் வேத்தியன்!!

thevanmayam on 30 May 2009 at 21:31 said...

//Captcha என்பது இணையம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ ஒரு கணனியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படும் ஒரு சொற்கள் சார்ந்த புகுதல் உள்ளீடாகும்//
தமிழ் விளையாடுது!

ஆதவா on 30 May 2009 at 22:05 said...

உபயோகமான தக்வல். இதை உபயோகப்படுத்தி ரொம்ப நாட்களாகிறது.. (புதியதாக எங்கும் ரிஜிஸ்டர் செய்யவில்லை) ஒரே ஒருமுறை ரீலோட் செய்து கொண்டே இருந்தேன். முந்தைய சொல் ஒருமுறையேனும் வருமா என்று.... வரவேயில்லை!!!

பகிர்வுக்கு நன்றி வேத்தியன்!!!!
(ஓட்டும் போட்டாச்சு!!)

ஆ.முத்துராமலிங்கம் on 30 May 2009 at 22:33 said...

பயனுள்ளதகவல் அதை திறம்பட எழுதியிருக்கீங்க.

முனைவர் சே.கல்பனா on 30 May 2009 at 23:19 said...

நல்ல பயனுள்ள பதிவு.

அ.மு.செய்யது on 31 May 2009 at 00:55 said...

எனக்கு இந்த காப்ட்சா மண்ட காய வச்சிருக்கு..

கண்ணாடி அணிய வில்லையென்றால் எனக்கு இந்த காப்ட்சாவை பார்ப்பது குதிரை கொம்பாகிவிடும்.

அரிய தகவல் வேத்தி சார்.....இது தான் உங்கள் முகவரி.

வேத்தியன் on 31 May 2009 at 08:13 said...

sakthi said...
உங்கள் பதிவுகளை பத்தி கேள்விபட்டு இருக்கின்றேன் சில பதிவுகளை பார்த்திருக்கிறேன் இந்த அளவு கணினி பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை
பயனுள்ள பதிவு
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி அக்கா...

வேத்தியன் on 31 May 2009 at 08:14 said...

அபுஅஃப்ஸர் said...
நல்ல பதிவு வேத்தியா, பகிர்வு

//Captcha என்பது இணையம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ ஒரு கணனியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படும் ஒரு சொற்கள் சார்ந்த புகுதல் உள்ளீடாகும்//

சரியான எளிமையான விளக்கம்

நன்றி வேத்தியா//

நன்றி நன்றி...

வேத்தியன் on 31 May 2009 at 08:14 said...

கலையரசன் said...
எளிமையான விளக்கம்.. எல்லோரும் அறிந்து கொள்ளும்படி பதிவிட்டமைக்கு!
OCR ல கூட கண்டுபிடிக்க முடியாது என்பதை இப்போதான் தெரிஞ்சிகிட்டேன்!//

நானும் சிலநாட்களுக்கு முன்னர் தான் தெரிந்து கொண்டேன்...
நன்றி...

வேத்தியன் on 31 May 2009 at 08:15 said...

krish said...
The term CAPTCHA is short for 'Completely Automated Public Turing test to tell Computers And humans Apart'
krish//

இதையும் தெரிந்தே வைத்திருந்தேன்...
பதிவு எழுதும் போது மறந்துவிட்டது..
தகவலுக்கு மிக்க நன்றி...

வேத்தியன் on 31 May 2009 at 08:16 said...

thevanmayam said...
விளக்கம் பிரமாதம் வேத்தியன்!!//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 31 May 2009 at 08:17 said...

ஆதவா said...
உபயோகமான தக்வல். இதை உபயோகப்படுத்தி ரொம்ப நாட்களாகிறது.. (புதியதாக எங்கும் ரிஜிஸ்டர் செய்யவில்லை) ஒரே ஒருமுறை ரீலோட் செய்து கொண்டே இருந்தேன். முந்தைய சொல் ஒருமுறையேனும் வருமா என்று.... வரவேயில்லை!!!

பகிர்வுக்கு நன்றி வேத்தியன்!!!!
(ஓட்டும் போட்டாச்சு!!)//

ஆச்சர்யம் ஆனால் உண்மை...
ஒருநாளைக்கு சராசரியாக 16 மில்லியன் காப்ட்சாக்கள் புழக்கத்தில் உள்ளனவாம்...
ஒருமுறை வந்தது எங்கு திரும்ப வரப்போகிறது???
:-)

நன்றி ஆதவா...

வேத்தியன் on 31 May 2009 at 08:17 said...

ஆ.முத்துராமலிங்கம் said...
பயனுள்ளதகவல் அதை திறம்பட எழுதியிருக்கீங்க.//

நன்றிங்க...

வேத்தியன் on 31 May 2009 at 08:18 said...

முனைவர் சே.கல்பனா said...
நல்ல பயனுள்ள பதிவு.//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 31 May 2009 at 08:18 said...

அ.மு.செய்யது said...
எனக்கு இந்த காப்ட்சா மண்ட காய வச்சிருக்கு..

கண்ணாடி அணிய வில்லையென்றால் எனக்கு இந்த காப்ட்சாவை பார்ப்பது குதிரை கொம்பாகிவிடும்.

அரிய தகவல் வேத்தி சார்.....இது தான் உங்கள் முகவரி.//

OCRகளால் தான் நமக்கும் இந்தத் தொல்லை... :-)

”சார்”ல்லாம் கொஞ்சம் ஓவரா கீதே???
:-)

நன்றி செய்யது...

Anonymous said...

very useful...

Anonymous said...

When writing your blog you should try to give something back to
the community as not only will it give more people a reason to read, it is a nice idea to
try and teach people something rather than just entertain them.
By following them, you will shortly embark on a blogging career that you never imagined.
General availability of RSS Button Make a RSS button
widely available for any blog traffic that lands on your internet site.My webpage: blog writing

Anonymous said...

Cellulite is an unsightly dimpled appearance, especially around the thighs.
Water, suction, laser, massage and now there is the
electric muscle inspiration. Vichy is a very popular company
in the European market.

Also visit my web-site - Strecth marks

Anonymous said...

Article Source: learn some information about how to stop nail
biting naturally, please click on this link:
stop nail biting. This is easier to do following a shower when your hands and
nails are wet. particular finger you won't ever bite and can perform the biting on remaining fingers.

My page - How to stop biting nails

Anonymous said...

"After reading your book, I've been hemorrhoid-free for almost two years - which is amazing because I didn't think this was possible. First to provide relief and begin shrinking the hemorrhoids you will want to start with sitz bath and witch hazel. There was a lot of resistance from the public on the effectiveness of this system but Japanese scientists who came up with this idea were unperturbed.

Here is my site - at home remedies for external hemorrhoids

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.