Friday, 13 March 2009

உலகத்தில் அதிக சம்பளம் பெறும் 10 அழுக்கான தொழில்கள்...


அதிகமான சம்பளம் பெறும் அழுக்கான வேலைகள் (10 High Paying Dirty Jobs) என்னான்னு தெரியுமா???

ஆங்கிலத்தில வாசித்தேன்... அதை தமிழில் தொகுத்து தருகிறேன்...
ஏதும் பிழை இருந்தால் கூறவும்...

1. Crime Scene Cleaner (குற்றச் செயல் நடந்த இடத்தை துப்பரவு செய்பவர்)
இது அதிகமாக காவல்துறை சார்ந்த வேலை.
கொலைகளும், தற்கொலைகளும் அதிகமாக இரத்தம் சிந்தக் கூடிய சந்தர்ப்பங்கள்... அந்த வேளைகளில் இவர்கள் அந்த இடத்தை துப்பரவு செய்ய வேண்டும்...
விபத்தின் அளவைப் பொறுத்து துப்பரவு செய்ய சில மணித்தியாலங்களிலிருந்து சில நாட்கள் வரை எடுக்குமாம்...
இந்த தொழில் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

2. Plumber (நீர்க்குழாய் பழுது பார்ப்பவர்)
வெளி நாடுகளில் அதிக சம்பளம் பெறும் இலகுவான தொழில் இது தானாம்...
நீர்க்குழாய் (Water Tap) உடைந்தால் கூட ஒரு ப்ளம்பர் வந்து தான் செய்ய வேண்டும் என எதிர்ப் பார்ப்பார்களாம்...
அமெரிக்காவில் ஒரு சாதாரண ப்ளம்பர் வருடத்துக்கு சராசரியாக $47000 உழைக்க முடியுமாம் !
இந்த தொழில் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

3. Embalmer (உடலை பதப்படுத்துபவர்)
அதிகமான சமயங்களை சார்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை வைத்து சடங்கு செய்ய வேண்டியவர்கள்.
அவர்களின் தேவைக்காக வேலை செய்பவர்கள் இவர்கள்...
இந்த உடலை பதப்படுத்தும் செய்முறைக்கு ஆதாரமானது பண்டைய எகிப்தியர்கள் செய்த "மம்மி" ஆக்கும் தந்திரம் (Mummify) தானாம்...
இந்த தொழில் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

4. Coal Miner (நிலக்கரி அகழ்பவர்)
குப்பை அள்ளுதல், மீன்பிடித்தல் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது இதுவும் இன்றைய காலத்தில் ஆபத்தான ஒரு தொழிலாகும்...
அதிலுள்ள மெதேன் உடலுக்கு ஆபத்தானது.
மேலும் வெடிப்பு சம்பவங்களும் நடக்க வாய்ப்புகள் அதிகம்...
இந்த தொழில் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

5. Sewer Inspector (நிலத்தடி சாக்கடை துப்பரவு கண்காணிப்பாளர்)
எலிகள்,கரப்பான்பூச்சிகள் போன்றன இறந்து நீர் செல்லும் வழியை அடைக்கும், அவற்றை துப்பரவு செய்து நகரங்களில் வாழும் பலரின் சுகாதாரத்துக்கு பொறுப்பானவர்கள்...
நீர் செல்லும் குழாய்களில் உள்ள உடைவுகளையும் அடியில் சென்று பார்க்க வேண்டி ஏற்படுமாம்...
ஆபத்தான தொழில்...
இந்த தொழில் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

6. Crab Fisherman (நண்டு, மீன் பிடிப்பவர்)
இது சாதாரணமாக லீவு நாட்களில் அமைதியாக மீன் பிடிக்கும் மாதிரி இல்லைங்க...
Fishing persistently ranks as the most deadly occupation in the U.S.
இந்த தொழில் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

7. Portable Toilet Cleaner (எடுத்துச் செல்லக்கூடிய கழிவிட துப்பரவாக்கி)
ஒரு வெற்றிடத்தாங்கியையும் குழாயையும் பாவித்து உள்ளேயுள்ளதை உறிஞ்சி எடுக்க வேண்டும்...
சுகாதாரத்துகு கேடான தொழில்...
இந்த தொழில் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

8. Oil Rig Worker (எண்ணைக் கிணற்றில் வேலை செய்பவர்)
அதிகமான சம்பளம் பெறும் ஒரு தொழிலாக இருந்தாலும் இலகுவான தொழிலல்ல...
எண்ணைக் கிணற்றில் வேலை செய்பவரின் தினசரி வாழ்க்கை அழுக்கானதும், ஆபத்தானதும் உள்ளதாம்...
இந்த தொழில் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

9. Gastroenterologist
இவரை GI Doctor எனவும் அழைப்பர்...
நாம் உண்ணும் உணவு சமிபாடடைவதில் ஏதும் பிரச்சினை இருப்பின் இவரை அணுகலாம்...
இந்த மருத்துவரிடம் யாரும் சந்தோஷமாக செல்வது இல்லையாம்... :-)
இந்த தொழில் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

10. Garbage Collector (குப்பை சேகரிப்பவர்)
வீதியில் குப்பைத் தொட்டியை கண்டால் மூக்கை மூடியபடி நாம் செல்வோம்.
ஆனால், இவர்கள் நாம் போடும் கழிவுகளை துப்பரவு செய்து நமது சுகாதாரமான வாழ்வுக்கு துணையாக இருக்கிறார்கள்...
உடலுக்கு மிகக் கேடான தொழில்...
இந்த தொழில் பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.
உலகத்தில் அதிக சம்பளம் பெறும் 10 அழுக்கான தொழில்கள்...SocialTwist Tell-a-Friend

51 . பின்னூட்டங்கள்:

இராகவன் நைஜிரியா on 13 March 2009 at 13:18 said...

இதெல்லாம் ரொம்ப கஷ்டமான தொழில்தாங்க.

நினைச்சு பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.

இதே மாதிரி மிகவும் கஷ்டமான மற்றொரு தொழில், கால்பந்து விளையாட்டிற்கு நடுவராக இருப்பது.

விளையாட்டு வீரர்களை விட அதிக தூரம் ஓடவேண்டும், அவர்களை கண்காணிக்க வேண்டும், அவர்களிடம் இருந்து சில சமயங்களில் அடிவாங்காமல் தப்பிக்க வேண்டும்.

இராகவன் நைஜிரியா on 13 March 2009 at 13:18 said...

ஹையா,... மீ த பர்ஸ்ட்

வேத்தியன் on 13 March 2009 at 13:19 said...

வாங்க இராகவன் அண்ணே...

வேத்தியன் on 13 March 2009 at 13:20 said...

இராகவன் நைஜிரியா said...

ஹையா,... மீ த பர்ஸ்ட்//

ஆமா, நீங்க தான்...
வாழ்த்துகள்...

வேத்தியன் on 13 March 2009 at 13:21 said...

இராகவன் நைஜிரியா said...

இதெல்லாம் ரொம்ப கஷ்டமான தொழில்தாங்க.

நினைச்சு பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.

இதே மாதிரி மிகவும் கஷ்டமான மற்றொரு தொழில், கால்பந்து விளையாட்டிற்கு நடுவராக இருப்பது.

விளையாட்டு வீரர்களை விட அதிக தூரம் ஓடவேண்டும், அவர்களை கண்காணிக்க வேண்டும், அவர்களிடம் இருந்து சில சமயங்களில் அடிவாங்காமல் தப்பிக்க வேண்டும்.//

அதுன்னா சரிதான்...
:-)

வேத்தியன் on 13 March 2009 at 13:21 said...

ஆனா அழுக்கான வேலை இல்லையே???
:-)))

thevanmayam on 13 March 2009 at 13:22 said...

ரொம்ப கஷ்டம்தான்!!!

thevanmayam on 13 March 2009 at 13:22 said...

கெட்ட வாடை அதிகம் இருப்பதால் யாரும் போவது இல்லை..

வேத்தியன் on 13 March 2009 at 13:24 said...

thevanmayam said...

ரொம்ப கஷ்டம்தான்!!!//

வாங்க டாக்குத்தரே...
gastroenterologistக்கு தமிழில் என்ன சொல்லலாம்???

thevanmayam on 13 March 2009 at 13:25 said...

நம் ஊரில் இவ்வளவு சம்பளம் இல்லை!!

வேத்தியன் on 13 March 2009 at 13:25 said...

thevanmayam said...

நம் ஊரில் இவ்வளவு சம்பளம் இல்லை!!//

ஆமாங்க...
ஆனா அவிங்க ஊர்ல செலவும் கூட தானே???
:-)

முரளிகண்ணன் on 13 March 2009 at 13:27 said...

நல்ல பதிவு

வேத்தியன் on 13 March 2009 at 13:31 said...

முரளிகண்ணன் said...

நல்ல பதிவு//

முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முரளி...

நட்புடன் ஜமால் on 13 March 2009 at 13:35 said...

உண்மையிலேயே இரசிச்சேங்க

உலகத்தில் எவ்வளவு விடயங்கள் இருக்கு பகிர்ந்து கொள்ள ...

அருமை வேத்தியன்.

வேத்தியன் on 13 March 2009 at 13:37 said...

நட்புடன் ஜமால் said...

உண்மையிலேயே இரசிச்சேங்க

உலகத்தில் எவ்வளவு விடயங்கள் இருக்கு பகிர்ந்து கொள்ள ...

அருமை வேத்தியன்.//

வாங்க ஜமால் அண்ணே...
நன்றி நன்றி...

இராகவன் நைஜிரியா on 13 March 2009 at 13:45 said...

இதே மாதிரி கொடுமையா தொழிலகளில் ஒன்று.. பல் மருத்துவர். சில பேர் வாயைத்திறந்தாலே மயக்க மருந்து தேவையில்லாமலே மயக்கம் வந்துடும்.

பல் மருத்துவர் ரொம்ப பாவங்க.

இராகவன் நைஜிரியா on 13 March 2009 at 13:47 said...

// வேத்தியன் said...

ஆனா அழுக்கான வேலை இல்லையே???
:-))) //

அழுக்கான வேலையில்லை.. சரிதாங்க.. நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன். கஷ்டமான வேலைங்க..

வேத்தியன் on 13 March 2009 at 14:30 said...

இராகவன் நைஜிரியா said...

இதே மாதிரி கொடுமையா தொழிலகளில் ஒன்று.. பல் மருத்துவர். சில பேர் வாயைத்திறந்தாலே மயக்க மருந்து தேவையில்லாமலே மயக்கம் வந்துடும்.

பல் மருத்துவர் ரொம்ப பாவங்க.//

சரிதான்...
பல் மருத்துவர் பாவம் தான்...

வேத்தியன் on 13 March 2009 at 14:32 said...

இராகவன் நைஜிரியா said...

// வேத்தியன் said...

ஆனா அழுக்கான வேலை இல்லையே???
:-))) //

அழுக்கான வேலையில்லை.. சரிதாங்க.. நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன். கஷ்டமான வேலைங்க..//

அதை சும்மா தான் சொன்னேன்...

ஆதவா on 13 March 2009 at 16:32 said...

ம்ம்ம்.... இவங்களையெல்லாம் எண்ணீப் பார்க்கும்பொழுது நாமெல்லாம் என்ன என்பதுபோல ஆகிவிடுகிறது..

எங்களது பழைய வீட்டுக்கு ஒரு கழிப்பிட சுத்தம் செய்பவன் தன் மகளோடு வருவான். கையில் ஒரு வாளி இருக்கும். பின்புறக் கழிவறையில் (பழைய முறை கழிப்பிடம் அது) மனிதக்கழிவுகளை அந்த வாளியில் அள்ளி போட்டுக்கொண்டு சென்றுவிடுவான்...

பீகாரில் இன்னமும் இந்த நடைமுறை இருக்கிறது... தங்களின் தலைமேல் அதை வைத்துக் கொண்டு செல்வார்கள்.... நினைக்கவே எத்தனை கொடுமை!!!!

ஆனால் இவைகளெல்லாம் அதிகம் சம்பளம் தரப்படுவதில்லை.....

அ.மு.செய்யது on 13 March 2009 at 17:25 said...

அரிய செய்திகளை தொகுத்தி எழுதியிருக்கிறீர்கள் வேத்தியன் ...

நிறைய தெரிந்து கொண்டேன்..நன்றி !!!!!!

அ.மு.செய்யது on 13 March 2009 at 17:27 said...

பல அருவருப்புகளையும் ஆபத்துகளையும் தாண்டி தொழில் செய்வோர் நம் நாட்டில் அதிகம் உளர்..

மற்ற மேலை நாடுகளில் இருப்பதை போன்று, இவர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை என்பது வருந்தத் தக்க விஷயம்.

வேத்தியன் on 13 March 2009 at 17:46 said...

@ ஆதவா...

ஆமாங்க...
சரியான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை...

வேத்தியன் on 13 March 2009 at 17:47 said...

அ.மு.செய்யது said...

அரிய செய்திகளை தொகுத்தி எழுதியிருக்கிறீர்கள் வேத்தியன் ...

நிறைய தெரிந்து கொண்டேன்..நன்றி !!!!!!//

நன்றி செய்யது...

வேத்தியன் on 13 March 2009 at 17:48 said...

அ.மு.செய்யது said...

பல அருவருப்புகளையும் ஆபத்துகளையும் தாண்டி தொழில் செய்வோர் நம் நாட்டில் அதிகம் உளர்..

மற்ற மேலை நாடுகளில் இருப்பதை போன்று, இவர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை என்பது வருந்தத் தக்க விஷயம்.//

ஆமாங்க...
சரியா சொன்னீங்க...

யோகன் பாரிஸ்(Johan-Paris) on 13 March 2009 at 18:04 said...

தெற்காசிய; தென்னமெரிக்க, ஆபிரிக்க தவிர்ந்த....
எனும் தலைப்பே மிகப் பொருத்தம்.
மேற்குறிப்பிட்ட நாடுகளில் இக்கடின வேலைக்குத் தகுந்த கூலியோ; மதிப்போ; பாதுகாப்போ கிடைப்பதில்லை. இது மிகக் கசப்பான உண்மை.

வேத்தியன் on 13 March 2009 at 18:10 said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தெற்காசிய; தென்னமெரிக்க, ஆபிரிக்க தவிர்ந்த....
எனும் தலைப்பே மிகப் பொருத்தம்.
மேற்குறிப்பிட்ட நாடுகளில் இக்கடின வேலைக்குத் தகுந்த கூலியோ; மதிப்போ; பாதுகாப்போ கிடைப்பதில்லை. இது மிகக் கசப்பான உண்மை.//

உண்மைதான்...
நன்றி யோகன் வருகைக்கும் கருத்துக்கும்...

பழமைபேசி on 13 March 2009 at 18:17 said...

வந்துட்டேன், தெரிஞ்சிகிட்டேன்...நன்றியும் சொல்லிகிறேன்!!!!

வேத்தியன் on 13 March 2009 at 18:19 said...

பழமைபேசி said...

வந்துட்டேன், தெரிஞ்சிகிட்டேன்...நன்றியும் சொல்லிகிறேன்!!!!//

:-)
நன்றிங்க...

sriram on 13 March 2009 at 18:42 said...

உலகிலேயே மிகவும் போர் அடிக்கும் வேலை எது? என் அபிப்பிராயம் Goods Train Guard ஆக இருப்பதுதான்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

வேத்தியன் on 13 March 2009 at 18:48 said...

sriram said...

உலகிலேயே மிகவும் போர் அடிக்கும் வேலை எது? என் அபிப்பிராயம் Goods Train Guard ஆக இருப்பதுதான்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA//

வாங்க ஸ்ரீராம் அண்ணே...
முதல் வருகைக்கும் கருத்துகும் நன்றிங்க...
நீங்க சொன்னா சரிதான்...
:-)

Anonymous said...

அடேயப்பா! ஒவ்வொன்றும் கஷ்டமான தொழில்களே!

காரணம் இப்படிப்பட்ட தொழில்கள் செய்வதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.

வெளிநாட்டில் கழிவில் இறங்கி துப்புரவில் ஈடுபடும் மனிதனுக்கு அதிக சம்பளம்!!

ஆனால் நம் நாட்டில்..... அவன் தான் கடை நிலை சம்பளக்காரனாயிருப்பான்...

நல்ல பதிவு நண்பா!

வேத்தியன் on 13 March 2009 at 19:12 said...

ஷீ-நிசி said...

அடேயப்பா! ஒவ்வொன்றும் கஷ்டமான தொழில்களே!

காரணம் இப்படிப்பட்ட தொழில்கள் செய்வதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.

வெளிநாட்டில் கழிவில் இறங்கி துப்புரவில் ஈடுபடும் மனிதனுக்கு அதிக சம்பளம்!!

ஆனால் நம் நாட்டில்..... அவன் தான் கடை நிலை சம்பளக்காரனாயிருப்பான்...

நல்ல பதிவு நண்பா!//

நன்றிங்க...
நீங்க சொல்றது சரிதான்...
என்ன பண்ண முடியும்???

நசரேயன் on 13 March 2009 at 20:13 said...

கேட்டுகிறேன்

Anonymous said...

இவை எல்லாம் அழுக்கான தொழில்கள் எண்று யாராம் சொன்னது????

நிலாவும் அம்மாவும் on 14 March 2009 at 04:18 said...

உண்மை தான்......இங்க குப்பை அள்ளுபவர்களிலேயே யார் ஒரு வருடத்தில் அதிகமாக குப்பை கொண்டு வர்றாங்கன்னு பார்த்து அவங்களுக்கு போனஸ் குடுப்பாங்க..

அந்த நாற்றத்தை விட குளிர் காலங்கள்ல கூட விடிய முன்னாடி எப்படி தான் அந்த லாரிக்கு பின்னாடியே நின்னு அவ்வளவு பெரிய குப்பைக் கூடையை தூக்கி போடுறாங்கன்னு தான் இருக்கும்....அவர்கள் முகத்தில எந்த ஒரு அருவருப்பும் தெரியாது.....பணிவோட நடந்துப்பாங்க

இங்க டீவீ -ல " " நு ஒரு நிகழ்ச்சி வரும்....பார்க்கவே கொடுமையா இருக்கும்....

நாம எல்லாம் இப்டி உக்காந்து போட்டி தட்ரோம்னா அது பற்றி குறை சொல்லாமல் சந்தோஷபடுவதே மேல்

புதியவன் on 14 March 2009 at 07:44 said...

//உலகத்தில் அதிக சம்பளம் பெறும் 10 அழுக்கான தொழில்கள்//

வித்தியாசமான...தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களின் தொகுப்பு வேத்தியன்...

மன விருப்பு வெறுப்புகளை தாண்டி இவர்கள் செய்யும் தொழிலுக்கு தகுந்த ஊதியம் அவர்களுக்கு கிடைக்கிறது...நம் நாட்டில் தான் நிலைமை வேறு...

வேத்தியன் on 14 March 2009 at 09:30 said...

நசரேயன் said...

கேட்டுகிறேன்//

வாங்க...
:-)

வேத்தியன் on 14 March 2009 at 09:31 said...

கவின் said...

இவை எல்லாம் அழுக்கான தொழில்கள் எண்று யாராம் சொன்னது????//

இது ஒரு கணக்கெடுப்பில வந்த தகவல்கள் கவின் அண்ணே...
:-)

வேத்தியன் on 14 March 2009 at 09:32 said...

@ நிலாவும் அம்மாவும்...

ஆமாங்க...
பாவம் தான்...

வேத்தியன் on 14 March 2009 at 09:33 said...

@ புதியவ்ன்...

நன்றி...
ஆமாங்க...

RAMYA on 14 March 2009 at 10:33 said...

அருமையான பதிவு ரொம்ப நல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க!!

RAMYA on 14 March 2009 at 10:35 said...

ரொம்ப கஷ்டமான தொளில்ங்க
இதையும் அவர்கள் எவ்வளவு சகிப்புத் தன்மையோட செய்யறாங்க பாத்தீங்களா??

பாக்க, படிக்க ரொம்ப கஷ்டமா போச்சுங்க.

RAMYA on 14 March 2009 at 10:38 said...

செய்யும் தொழிலே தெய்வம் என்ற சொல் இங்கே உண்மை ஆகிவிட்டது அல்லவா?

அருவருப்புக்களை எல்லாம் தாண்டி செய்கின்ற வேலை அல்லவா?

அவங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும் வேத்தியன்.

ரொம்ப நல்லா தொகுத்து வழங்கி இருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள்!!!

வேத்தியன் on 14 March 2009 at 10:39 said...

RAMYA said...

அருமையான பதிவு ரொம்ப நல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க!!//

ரொம்ப நன்றிங்க...

வேத்தியன் on 14 March 2009 at 10:39 said...

RAMYA said...

செய்யும் தொழிலே தெய்வம் என்ற சொல் இங்கே உண்மை ஆகிவிட்டது அல்லவா?

அருவருப்புக்களை எல்லாம் தாண்டி செய்கின்ற வேலை அல்லவா?

அவங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும் வேத்தியன்.

ரொம்ப நல்லா தொகுத்து வழங்கி இருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள்!!!//

ஆமாங்க...
சரியா சொன்னீங்க...
நன்றி நன்றி...

மாதவராஜ் on 14 March 2009 at 11:17 said...

முக்கியமான பதிவு.

ஆனால் நம்ம ஊரில் இவர்களுக்குச் சம்பளம் ரொம்பக் குறைவுதான்.

வேத்தியன் on 14 March 2009 at 13:16 said...

மாதவராஜ் said...

முக்கியமான பதிவு.

ஆனால் நம்ம ஊரில் இவர்களுக்குச் சம்பளம் ரொம்பக் குறைவுதான்.//

ஆமாங்க...
வருகைக்கு நன்றி நண்பரே...

கமல் on 14 March 2009 at 21:37 said...

இது அதிகமாக காவல்துறை சார்ந்த வேலை.
கொலைகளும், தற்கொலைகளும் அதிகமாக இரத்தம் சிந்தக் கூடிய சந்தர்ப்பங்கள்... அந்த வேளைகளில் இவர்கள் அந்த இடத்தை துப்பரவு செய்ய வேண்டும்...
விபத்தின் அளவைப் பொறுத்து துப்பரவு செய்ய சில மணித்தியாலங்களிலிருந்து சில நாட்கள் வரை எடுக்குமாம்...//


ம்...இது கொஞ்சம் பயங்கரமான வேலை?

எனக்கு இப்பிடியான இடங்களைக் கண்டாலே மயக்கம் வரும்?

அதோடை இரத்தத்தைப் பார்க்கவே பயம் வரும்?

இதுக்கு நல்ல சம்பளம் கொடுப்பது சிறந்தது..

குடுகுடுப்பை on 14 March 2009 at 23:32 said...

வேலையே இல்லாம சம்பளம் வாங்குற தொழிலையும் பட்டியல் போடுங்க

சுரேஷ் குமார் on 22 May 2009 at 15:55 said...

என்ன பண்ண..?
எல்லாம் இந்த ஒரு ஜான் வயித்துக்காக தான்..
அருமையான தொகுப்பு சகா..

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.