Thursday, 5 March 2009

கடவுள் vs பில் கேட்ஸ்...


பில் கேட்ஸ் பத்தி நக்கல் பண்ணி வந்த ஆக்கங்கள் எவ்ளோ தான் படிச்சாலும் நம்மளுக்கு கட்டவே கட்டாதுங்க...
:-)

ஏற்கனவே பில் கேட்ஸ் பத்தி ஒரு பதிவு போட்டாச்சு...
அந்தப் பதிவு பார்க்க இங்கே சொடுக்குங்க...

ஆனாலும் தாகம் தீரவில்லை...
இது மின்னஞ்சல் சரக்கு...
படைத்தவனுக்கு வாழ்த்துகள் !!!
:-)

---------------------------------------------------------------------

நம்ம பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.

'ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே… நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ' கடவுள் சொன்னார்.

பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.

முதல்ல நரகம்.
ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ் க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.
ஐயாவுக்கு ரொம்ப திருப்தி.

ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?
கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.
அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.
ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு…
சரி.. கடவுளே… நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு.

கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.
அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ் ன்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.
யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியே… ன்னு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..

"இன்னாபா.. இன்னா மேட்டரு..?" கடவுள் கேட்டாரு.
"அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச்ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா..?" கேட்ஸ் கத்துனாரு.

கடவுள் சிரிச்சாரு.. "ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!".
கடவுள் vs பில் கேட்ஸ்...SocialTwist Tell-a-Friend

32 . பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் on 6 March 2009 at 14:56 said...

அட மக்கா

அவர விடறதா இல்லியா

வேத்தியன் on 6 March 2009 at 14:57 said...

நட்புடன் ஜமால் said...

அட மக்கா

அவர விடறதா இல்லியா//

நானும் எவ்ளவோ முயற்சி பண்ணி பாக்கிறேன்...
முடியல...
:-)

நட்புடன் ஜமால் on 6 March 2009 at 15:03 said...

\\பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர )\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் on 6 March 2009 at 15:03 said...

\\பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க\\

அட யாருங்க உங்களுக்கு மெயிலினது நம்ம சார்ப்பாவும் வாழ்த்திடுங்க

வேத்தியன் on 6 March 2009 at 15:05 said...

நட்புடன் ஜமால் said...

\\பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க\\

அட யாருங்க உங்களுக்கு மெயிலினது நம்ம சார்ப்பாவும் வாழ்த்திடுங்க//

செஞ்சுட்டா போச்சு...

அ.மு.செய்யது on 6 March 2009 at 15:35 said...

//கடவுள் சிரிச்சாரு.. "ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!". //

தாறு மாறு....விண்டோஸ் ஒரு டுபாகூர்ங்க..

ஆதவா on 6 March 2009 at 16:46 said...

நானும் பல அமெரிக்க ஜோக்குகள் (புஷ், கிளிண்டன், பில்கேட்ஸ்) கேட்டிருக்கிறேன்... இது நம்ம லோக்கல் பாஷையில உட்டாலங்கடி!!

இந்த ஜோக்கை பில்கேட்ஸுக்கு அனுப்புங்கப்பா.. விழுந்து விழுந்து சிரிப்பாரு..

கடைசியில உல்டா அடிச்சு பாவம் அந்த மனுஷனை இப்படியா சி(ரி)க்க வைக்கிறது!!!

கலக்கலப்பா...

வேல் தர்மா on 6 March 2009 at 16:55 said...

I have added it to my facebook

வேத்தியன் on 6 March 2009 at 17:56 said...

அ.மு.செய்யது said...

//கடவுள் சிரிச்சாரு.. "ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!". //

தாறு மாறு....விண்டோஸ் ஒரு டுபாகூர்ங்க..//

ஆமாங்க...
சரிதான்...
:-)

வேத்தியன் on 6 March 2009 at 17:57 said...

ஆதவா said...

நானும் பல அமெரிக்க ஜோக்குகள் (புஷ், கிளிண்டன், பில்கேட்ஸ்) கேட்டிருக்கிறேன்... இது நம்ம லோக்கல் பாஷையில உட்டாலங்கடி!!

இந்த ஜோக்கை பில்கேட்ஸுக்கு அனுப்புங்கப்பா.. விழுந்து விழுந்து சிரிப்பாரு..

கடைசியில உல்டா அடிச்சு பாவம் அந்த மனுஷனை இப்படியா சி(ரி)க்க வைக்கிறது!!!

கலக்கலப்பா...//

இது நமது லோக்கல் பாஷையில இருக்குறதால நானும் இதை ரொம்ப ரசிச்சேன்...

வேத்தியன் on 6 March 2009 at 17:58 said...

வேல் தர்மா said...

I have added it to my facebook//

வாங்க வேல்தர்மா...
நோ ப்ராப்ளம்...
எனக்கு மெயிலில் வந்தது...

thevanmayam on 6 March 2009 at 18:52 said...

நம்ம பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?.///
பில்கேட்ஸ் ரெண்டுமே பண்ணியிருக்காரா?

thevanmayam on 6 March 2009 at 18:55 said...

பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.///

பில் கேட்ஸொன்னா கடவுளே கூட்டிப்போகிறாரப்பா!

thevanmayam on 6 March 2009 at 18:57 said...

ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!".
//
நரகத்துக்கே ஸ்கிரீன் சேவரா??
இஃகி இஃகி!!

வேத்தியன் on 6 March 2009 at 19:01 said...

thevanmayam said...

நம்ம பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?.///
பில்கேட்ஸ் ரெண்டுமே பண்ணியிருக்காரா?//

ஆமாங்க...
ஏன் உங்களுக்கு தெரியாதா???
:-)

வேத்தியன் on 6 March 2009 at 19:02 said...

thevanmayam said...

பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.///

பில் கேட்ஸொன்னா கடவுளே கூட்டிப்போகிறாரப்பா!//

ஆமா ஆமா...
:-)

கமல் on 6 March 2009 at 19:24 said...

"ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!".


ஐயோ தாங்க முடியலையே...சிரியுங்கோ.....சிரியுங்கோ..............சிரிச்சுக் கொண்டே இருங்கோ.............

பழமைபேசி on 6 March 2009 at 19:25 said...

வந்தேன், வாசித்தேன், செல்கிறேன்!!!

ஜீவன் on 6 March 2009 at 20:22 said...

supper

வேத்தியன் on 6 March 2009 at 21:05 said...

கமல் said...

"ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!".


ஐயோ தாங்க முடியலையே...சிரியுங்கோ.....சிரியுங்கோ..............சிரிச்சுக் கொண்டே இருங்கோ.............//

:-))))))))))))))))))))
நான் சிரிக்கிறேனுங்கோ...

வேத்தியன் on 6 March 2009 at 21:05 said...

பழமைபேசி said...

வந்தேன், வாசித்தேன், செல்கிறேன்!!!//

நன்றி...

வேத்தியன் on 6 March 2009 at 21:06 said...

ஜீவன் said...

supper//

நன்றி நன்றி...

நசரேயன் on 6 March 2009 at 21:26 said...

எனக்கு படி அளக்கிற பகவான் அவரு

வேத்தியன் on 6 March 2009 at 21:27 said...

நசரேயன் said...

எனக்கு படி அளக்கிற பகவான் அவரு//

அய்யய்யோ, அவருட்ட இதச் சொல்லிப் புடாதீக...
:-)

நட்புடன் ஜமால் on 6 March 2009 at 21:46 said...

யூத் விகட வாழ்த்துகள்

வேத்தியன் on 6 March 2009 at 21:48 said...

நட்புடன் ஜமால் said...

யூத் விகட வாழ்த்துகள்//

மிக்க நன்றி...

அமிர்தவர்ஷினி on 7 March 2009 at 15:28 said...

இதனைப் படித்துப் பாருங்கள்!!!!!!!!!!

ஐயா பில்கேட்ஸு,

_ சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்._

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "*Start*" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "*Find**" *மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "*Hearts**" *விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "*My pictures**"* என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?


இதனை வாசித்தவுடன் நான் ஏதோ பெரிய அறிவாளி என நினத்து விட வேண்டாம்!!!!!!!!!!!!!!!!!
இது 'தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' இல் இருந்து சுட்டது!!!!!!!!!!!!!!!!!!
எதற்கும் எழுதியவரின் பெயரையும் தந்து விடுகிறேன்............
Thanks Piraba Siva...........

Karthik on 7 March 2009 at 16:47 said...

ha..ha, nice!

:))

வேத்தியன் on 7 March 2009 at 18:12 said...

@ அமிர்தவர்ஷினி...
ஹா ஹா...
கலக்கல்...

வேத்தியன் on 7 March 2009 at 18:13 said...

Karthik said...

ha..ha, nice!

:))//

நன்றி கார்த்திக்...

Anonymous said...

///கடவுள் சிரிச்சாரு.. "ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!". ////

சூப்பர்ப்! பில்கேட்ஸ் ஸ்கிரீன் சேவர் கண்டுபிடிச்சதுக்கு ரொம்ப வருத்தபட்டிருப்பாரு! :)

வேத்தியன் on 11 March 2009 at 18:45 said...

ஷீ-நிசி said...

///கடவுள் சிரிச்சாரு.. "ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!". ////

சூப்பர்ப்! பில்கேட்ஸ் ஸ்கிரீன் சேவர் கண்டுபிடிச்சதுக்கு ரொம்ப வருத்தபட்டிருப்பாரு! :)//

ஆமாங்க...
நன்றி ஷீ-நிசி முதல் வருகைக்கும் கருத்துக்கும்...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.