நிலை 1 : கண்காணிப்பும் ஆராய்வும்...
இந்த முதல் நிலையில் எல்லோரும் கண்காணிக்கிறதுல முழுமூச்சா ஈடுபடுவாங்க...
பொதுவா எல்லாரும் இந்த நிலையை குழந்தை பருவத்துலயிருந்து வாலிப பருவம் வரை செய்வாங்க...
இந்த நிலையில கண்காணிக்கிறது தான் மனசுல ஆழமா பதியும்...
நிலை 2 : ஒன்றை தெளிவாக காணுதல்...
முதல் நிலையில் கண்காணித்ததை வைத்து ஒரு முடிவு எடுத்து அதை நோக்கி பாதையை வகுத்தல்...
நிலை 3 : வேலை செய்தல்...
இரண்டாம் நிலையில் எடுத்த முடிவுகளை வைத்து வாழ்க்கைப் பாதையை அமைத்து படித்து முடித்து வேலைக்கு செல்லும் நிலை...
இந்த நிலையில் உங்களதும் குடும்பத்தினதும் பொறுப்புகளை சுமக்க முன்வரவேண்டி ஏற்படும்...
நிலை 4 : முன்னேறுதல்...
செய்யத் தொடங்கிய வேலையில் முன்னேற வேண்டும், பதவியுயர்வு பெற வேண்டும் என நினைப்பதெல்லாம் இந்த நிலை தான்...
நிலை 5 : நிபுணர் ஆகுதல்...
ஒரு வேலையில் சிறந்து விளங்குபவரை "நிபுணர்" என அழைப்பர்.
அது போல செய்யும் வேலையில் சிறப்புத்தேர்ச்சி அடைந்து விளங்க வேண்டும்...
அதன் மூலம் வேலையில் அதிக வாய்ப்புகளை தேடலாம்...
நிலை 6 : எல்லைகளை கடந்து செல்லல்...
செய்யும் வேலையில் சிறந்து விளங்கி அந்தந்த காலங்களில் வரும் தடைகளையும் சவால்களையும் தாண்டி முன்னேற வேண்டும்...
முடிந்தளவு முயற்சி இதற்கு அவசியம்...
நிலை 7 : கடைசிக்கு முதல் நிலை...
இந்த நிலையை ஆங்கிலத்தில் Life Calling என அழைப்பர்...
கற்றது, சம்பாதித்தது எல்லாவற்றையும் வைத்து வாழ்க்கையை அனுபவித்தல்...
இந்த நிலையில் மரணம் கூட ஏற்படும்...
நிலை 8 : மீண்டும் உருவாதல்...
இது மயிர்க்கொட்டி உருமாறி வண்ணத்துப்பூச்சியாக மாறுவதைப் போன்றது...
அது போல வாழ்க்கை மாற்றம் என்று கூட சொல்லலாம்...
ஒரு புதிய சமுதாயம் உருவாக வாய்ப்புக் கொடுத்தல்...
பாட்ஷாவுல ஒரு பாட்டு... (வரிகள் சரியாக ஞாபகம் இல்லை... :-) )
"எட்டு எட்டா மனுச வாழ்வைப் பிரிச்சுக் கோ,
அதுல எந்த எட்டுல இப்ப இருக்க தெரிஞ்சுக் கோ"
அதுல எந்த எட்டுல இப்ப இருக்க தெரிஞ்சுக் கோ"
இது தான் எல்லோருடைய வாழ்க்கையின் நியதியும்...
30 . பின்னூட்டங்கள்:
நான் இன்னும் முதல் நிலையிலயே இருக்கேன்... அவ்வ்வ்....
இப்ப இரண்டாம் நிலைக்கு வந்துட்டேன்.. நீங்க சொன்னாப்ல, எனக்கு பாட்ஷா ஞாபகம்தான் வந்தது!! அதென்னவோ எட்டுக்கும் மனிதனுக்கு அப்படியொரு பொருத்தம்...
இது மயிர்க்கொட்டி உருமாறி வண்ணத்துப்பூச்சியாக மாறுவதைப் போன்றது...
நீங்க வேற ஏதும் மறைச்சு சொல்லலையே????? அவ்....
பழமைபேசி said...
நான் இன்னும் முதல் நிலையிலயே இருக்கேன்... அவ்வ்வ்....//
நானுந்தேன்...
கவலைப்படாதீங்க, முன்னுக்கு வந்துடலாம்...
:-)
ஆதவா said...
இப்ப இரண்டாம் நிலைக்கு வந்துட்டேன்.. நீங்க சொன்னாப்ல, எனக்கு பாட்ஷா ஞாபகம்தான் வந்தது!! அதென்னவோ எட்டுக்கும் மனிதனுக்கு அப்படியொரு பொருத்தம்...//
சந்தோஷம்...
ஆமாங்க...
ஆதவா said...
இது மயிர்க்கொட்டி உருமாறி வண்ணத்துப்பூச்சியாக மாறுவதைப் போன்றது...
நீங்க வேற ஏதும் மறைச்சு சொல்லலையே????? அவ்....//
ச்சீ ச்சீ...
இல்லையே...
:-)))
அடடா!
இது தெரியாம
போச்சே!
எத்தனாவது ஸ்டேஜில் இருக்கேன்னே புரியலையே!
thevanmayam said...
அடடா!
இது தெரியாம
போச்சே!//
:-)
சரி விடுங்க...
நானும் தெரியாம தான் இருந்தேன்...
இப்ப தெரிஞ்சுக்கிட்டா போச்சு...
thevanmayam said...
எத்தனாவது ஸ்டேஜில் இருக்கேன்னே புரியலையே!//
அனேகமா நீங்க இப்போ 5வது நிலையில இருப்பீங்க போல...
ஏதோ ஒரு நிலை!
நிலையில்லாத நிலை!!
ஆதவா சொல்வது போல எனக்கும் பாட்சா பாடல் தான் நினைவுக்கு வந்தது?
நல்லாத் தான் கொள்பிட்டியிலை றூம் போட்டு யோசிக்கிறீங்கள்:))
நான் இப்பத் தான் முதல் நிலையில் இருக்கிறேன்...எப்பிடிங்க அடுத்த நிலைக்கு முன்னேற முடியும்?
அடுத்தநிலைக்குபோவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க..
அப்ப ஏதாச்சும் ஊக்க மருந்து இருக்கோ?
படாரென்று கடைசி நிலைக்குப் போய் உடன முதல் நிலைக்குத் திரும்பி வாற மாதிரி?
பாருங்க ஏதாச்சும் பெட்டா மாக்கற்றிலை இருந்தால் வாங்கி ஒஸ்ரேலியாவுக்கும் அனுப்பி விடுங்க??
அந்த பாஷா பாடல் நல்ல வரிகள்
சொன்னா நம்ப மாட்டீங்க ..பதிவோட தலைப்பை பார்த்ததும் எனக்கு பாட்ஷா பட பாடல் தான் மனசுல வந்துச்சு...நீங்களே போட்டீங்க
நல்ல பதிவு..
நிலை 4 : முன்னேறுதல்...
சும்மா பொட்டி தட்டாம உருப்படிய பதிவு போடுற அளவுக்கு முன்னேறி இருக்கோம்ல
நிலை 6 : எல்லைகளை கடந்து செல்லல்...
மொக்கை தான் ....ஒண்ணுமே போடா விஷயம் இல்லன்னா எல்லை மீறி மொக்கை போடுறது தான்....எங்க வீட்டுக்கு வந்த காக்கா கருப்பா இருந்துச்சு, ,,நான் தோசை வட்டமா சுட்டேன்....
நிலை 7 : கடைசிக்கு முதல் நிலை...
அந்த அளவுக்கு சம்பாதிக்கனுமே
நிலை 8 : மீண்டும் உருவாதல்...
chaos தேற்றம் மாதிரியா
கமல் said...
நான் இப்பத் தான் முதல் நிலையில் இருக்கிறேன்...எப்பிடிங்க அடுத்த நிலைக்கு முன்னேற முடியும்?//
இதே கேள்வியைத் தான் நான் என்னையே கேக்கிறன்...
thevanmayam said...
அடுத்தநிலைக்குபோவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க..//
எல்லாவற்றையும் செஞ்சு பாத்து, சக்சஸ் ஆனா, அதை பத்தி போடலாம்...
:-)
கமல் said...
அப்ப ஏதாச்சும் ஊக்க மருந்து இருக்கோ?
படாரென்று கடைசி நிலைக்குப் போய் உடன முதல் நிலைக்குத் திரும்பி வாற மாதிரி?
பாருங்க ஏதாச்சும் பெட்டா மாக்கற்றிலை இருந்தால் வாங்கி ஒஸ்ரேலியாவுக்கும் அனுப்பி விடுங்க??//
கமல், இப்பத்தான் வெள்ளவத்தை மார்க்கெட்டை முடிச்சன்...
இனித் தான் பெட்டா...
இருந்தா எனக்கும் வாங்கிட்டு, உமக்கும் வாங்கி அனுப்பி விடுறன் ஓகே???
:-)
நட்புடன் ஜமால் said...
அந்த பாஷா பாடல் நல்ல வரிகள்//
ஆமாங்க...
எழுதிய புண்ணியவானுக்கு நன்றிகள்...
:-)
@ நிலாவும் அம்மாவும்...
நன்றி நிலாவுடைய அம்மா...
கிட்டத்தட்ட Chaos Theory மாதிரி தான் இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...
எனக்கும் அந்தளவுக்கு தெரியாதுங்க...
அடடா சூப்பரா இருக்கே நானும் இரண்டாம் நிலையில தான் இருக்கேன் நீங்க?
கலை - இராகலை said...
அடடா சூப்பரா இருக்கே நானும் இரண்டாம் நிலையில தான் இருக்கேன் நீங்க?//
வாங்க கலை...
ஓ, நீங்க ரெண்டாவதுக்கு போயிட்டீங்களா???
நான் இன்னும் மொதோ நிலையில் தான்னு நினைக்கிறேன்...
:-)
அருமையான பதிவு வேத்தியன்...வாழ்க்கையின் எட்டு நிலைகளை சரியாக கடந்தால் எட்டாத உயர் நிலைக்கு சென்று விடலாம்...வாழ்த்துக்கள் வேத்தியன்...
// புதியவன் said...
அருமையான பதிவு வேத்தியன்...வாழ்க்கையின் எட்டு நிலைகளை சரியாக கடந்தால் எட்டாத உயர் நிலைக்கு சென்று விடலாம்...வாழ்த்துக்கள் வேத்தியன்... //
நன்றி நன்றி...
நன்றாக உள்ளது அண்ணா..வயதும் குறிப்பிட்டு சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் ..ஆனால் அதுவும் உண்மைதான் ...சரியான வயதில் சரியான நிலையை பலரும் அடைவது இல்லை தான் ..நான் உட்பட.
// ஆண்ட்ரு சுபாசு said...
நன்றாக உள்ளது அண்ணா..வயதும் குறிப்பிட்டு சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் ..ஆனால் அதுவும் உண்மைதான் ...சரியான வயதில் சரியான நிலையை பலரும் அடைவது இல்லை தான் ..நான் உட்பட. //
வாங்க சுபாசு...
நன்றிங்க...
அண்ணா எல்லாம் இல்லீங்க...
நான் உங்களை விட சின்னவன்...
20 தான் ஆவுது...
:-)
வாங்க சுபாசு...
நன்றிங்க...
அண்ணா எல்லாம் இல்லீங்க...
நான் உங்களை விட சின்னவன்...
20 தான் ஆவுது...
:-)//
அப்படியா?!!!!
சரி விடுங்க ..மனதளவில் என்னை விட நீங்கள் மூத்தவர்தான் ...
// வாங்க சுபாசு...
நன்றிங்க...
அண்ணா எல்லாம் இல்லீங்க...
நான் உங்களை விட சின்னவன்...
20 தான் ஆவுது...
:-)//
அப்படியா?!!!!
சரி விடுங்க ..மனதளவில் என்னை விட நீங்கள் மூத்தவர்தான் ... //
ஆஹா ஆஹா...
விட மாட்டீங்க போல...
:-)
Post a Comment