Friday, 27 March 2009

சந்தோஷமான சுற்றுலாவும் கேவலமான கேள்வியும்...

இந்த விஷயம் பத்தி ரொம்ப நாளா எழுதனும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன்...
நடுவுல மறந்துட்டேன்..
இப்ப தான் மறுபடியும் ஞாபகம் வந்துச்சு..
அதான் எழுதிரலாம்ன்னு கிளம்பியாச்சு...

நாங்க நண்பர்கள் எல்லாம் ஒரு சுற்றுலா சென்றோம்...
சுற்றுலா முடிஞ்சு இப்போ ரெண்டு மாசம் முடிஞ்சு போச்சு...
இலங்கையின் மத்திய பகுதியில் மலை சார்ந்த இடங்கள் உண்டு..
அதனால மத்திய மலைநாடுன்னு சொல்லுவாங்க.

தேயிலைத் தோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும் பார்க்க அருமையாக இருக்கும்...

பாக்குறதுக்கு ரொம்ப அழகான இடங்கள் இருக்கு...
அப்பிடி ஒரு அழகான இடம் தான் நாங்க போனது..
இடம் ஹற்றன் (Hatton) நகரம்...

நாங்க போனதுக்கு அடுத்த நாள் ஹற்றனுக்கு அடுத்த நகரத்தில் ஜனாதிபதியின் பேச்சு இருக்குதாம்..
அந்த விஷயம் எங்களுக்கு தெரியாது..
தெரிஞ்சிருந்தா நாங்க அந்த இடத்துக்கு சுற்றுலா போயிருக்கவே மாட்டோம்ல...
அதன் காரணமாக அங்க ஒரே பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப் பட்டிருந்தார்கள்...
பொலீஸ் மற்றும் படையினர்ன்னு ஒரே பாதுகாப்பு தான் போங்க...
:-)

அப்போ நாங்க ஹற்றன் நகரத்துக்கு உள்ளே நுழையும் போது ஒரு இடத்துல நம்மை நிறுத்தினாங்க பொலீஸ்...
சரின்னு ஒவ்வொருத்தரினதும் அடையாள அட்டையை வாங்கி பாத்துட்டு "நாளைக்கு அடுத்த டவுன்ல ஜனாதிபதியின் கூட்டம் இருக்கு, அதனால நீங்க இங்க தங்கக் கூடாது"ன்னான்...
நேரம் பின்னேரம். திரும்பி வரவும் முடியாது...

சரின்னு உயர் அதிகாரிகிட்ட பேசி முடிவெடுக்கலாம்ன்னு சொல்லிட்டு காவல் நிலையத்துக்கு வரச் சொன்னான்...
சரின்னு போனோம்..
அங்க ஒருத்தன், இவனால தான் பிரச்சினையே எனக்கு...
எங்க எல்லோரினதும் அடையாள அட்டையை தரச் சொல்லி, வாங்கிப் படிச்சுட்டுருந்தான் அவன்...

எமது நண்பர் குழாமில் ஒரு பிராமணப் பையனும் இருக்கான்..
ஆனா நாம எப்போதும் ஜாதி, மதம்ன்னு பாக்குறதே இல்லை..
அவனும் அப்பிடி எல்லாம் பாக்குறதே இல்லை..
அது தான் நட்பு..
ஜாதி, மதம் பாக்குறது இல்லைல...

அவனோட ஐ.டி பாத்ததும் அவனைப் பாத்து கேட்டான் அந்த ஆளு, "நீ பேசாம கோயில்ல பூசை பண்ணிட்டு இருக்க வேண்டியது தானே, உனக்கு என்னத்துக்கு இந்த ட்ரிப் எல்லாம்???"...
இந்த கேள்வி கேட்டதும் எனக்கு கோபம் தலைக்கேறி விட்டது...
இவ்வளத்துக்கும் சுற்றுலா போன எமது நண்பர் குழாமில் இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவன்னு எல்லாருமே இருக்குறோம்...

அந்த கேள்வி கேட்ட முட்டாள் இவ்வளத்துக்கும் பொலீஸோ, படை அங்கத்தவனோ கிடையாது...
அவன் ஒரு ஊர்காவல் அதிகாரி..
அதுவும் அவன் ஒரு தமிழன்...
ஆனா எமது நாட்டுல தான் சட்டம் எல்லாம் கிடையாதுல்ல...
எதிர்த்து கேள்வி கேட்டா உள்ள தூக்கி போடுவாங்க..
பயம் வேற...

அந்த ஆளைப் பார்த்தால் பத்தாம் வகுப்பு கூட தேறியிருக்க மாட்டான் என்பது தெளிவாக புரிந்தது நமக்கு..
ஏன் அந்த கேவலமான கேள்வி கேக்கணும்ன்னு தோனிச்சு அவனுக்கு???
ஜாதி, மத வெறி பிடிச்சவனா அவன்???
இன்று கூட அவன் முகம் நினைச்சா எரிச்சல் தான் வருகிறது எனக்கு...
ஏன் பிராமணன் என்றால் கோயிலில் பூசை மட்டும் தான் பண்ண வேண்டுமா???
உல்லாசமாக ஒரு சுற்றுலா செல்ல முடியாதா???
கேவலமான பிறவி....

அவன் ஏன் அப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டாங்கிறது எனக்கு புரியவே இல்லை...
நான் என்ன சொல்ல வரேங்கிறதை சரியாக வார்த்தைகளில் கொண்டுவர முடியவில்லை..
ஆனாலும் வாசிக்கும் உங்களுக்கு என்ன சொல்ல வரேங்கிறது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்...

நாயை கழுவி நடு வீட்டுல வச்சாலும் அதனுடைய புத்தி மாறாதுங்கிற மாதிரி தான் அந்த ஆளும்...
உரிய ஆளுக்கு உரிய பதவி வழங்கப் பட வேண்டும்...
அப்போ தான் அதுக்குரிய மரியாதை கிடைக்கும்...

அவனை விட உயர் அதிகாரி எல்லாம் நமக்கு தெரியும்..
அந்த விஷயம் தெரிஞ்ச உடனே போட்டிருந்த காட்சட்டை நனையாத குறையாக எம்மை அனுப்பி வைத்தான் அந்த ஆளு...
(ஏன் காட்சட்டை நனையும்ன்னு எல்லாம் கேள்வி கேக்கக் கூடாது என்னை... ஓகே??) :-)

அந்த கேவலமான பிறவியை சந்தித்தது தவிர சுற்றுலா நன்றாக அமைந்தது எமக்கு...
இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக மத்திய மலைநாடு இருக்கின்றது...
அங்கே எடுத்த இரண்டு படங்களைப் பாருங்கள், உங்களுக்கே புரியும் எவ்வளவு அழகு என்று...

சந்தோஷமான சுற்றுலாவும் கேவலமான கேள்வியும்...SocialTwist Tell-a-Friend

39 . பின்னூட்டங்கள்:

கமல் on 27 March 2009 at 15:04 said...

நாயை கழுவி நடு வீட்டுல வச்சாலும் அதனுடைய புத்தி மாறாதுங்கிற மாதிரி தான் அந்த ஆளும்...
உரிய ஆளுக்கு உரிய பதவி வழங்கப் பட வேண்டும்...
அப்போ தான் அதுக்குரிய மரியாதை கிடைக்கும்...//

ஸப்பா.....என்னம்மா புது மொழி...சொறி...பழமொழி....

தூக்கல் தான்?? கொஞ்சம் பொறுங்கோ மிகுதி விமர்சனங்களுக்கு....

நட்புடன் ஜமால் on 27 March 2009 at 15:04 said...

சந்தோஷம் தான்

நட்புடன் ஜமால் on 27 March 2009 at 15:06 said...

நடுவுல மறந்துட்டேன்...\\

ஏன்.

வேத்தியன் on 27 March 2009 at 15:09 said...

கமல் said...

நாயை கழுவி நடு வீட்டுல வச்சாலும் அதனுடைய புத்தி மாறாதுங்கிற மாதிரி தான் அந்த ஆளும்...
உரிய ஆளுக்கு உரிய பதவி வழங்கப் பட வேண்டும்...
அப்போ தான் அதுக்குரிய மரியாதை கிடைக்கும்...//

ஸப்பா.....என்னம்மா புது மொழி...சொறி...பழமொழி....

தூக்கல் தான்?? கொஞ்சம் பொறுங்கோ மிகுதி விமர்சனங்களுக்கு....//

வாங்க கமல்...
பழமொழி சரிதானே???
:-)

வேத்தியன் on 27 March 2009 at 15:10 said...

நட்புடன் ஜமால் said...

நடுவுல மறந்துட்டேன்...\\

ஏன்.//

சில பல ஆணிகள் காரணமாத் தான்...
:-)

கமல் on 27 March 2009 at 15:18 said...

அந்த கேள்வி கேட்ட முட்டாள் இவ்வளத்துக்கும் பொலீஸோ, படை அங்கத்தவனோ கிடையாது...
அவன் ஒரு ஊர்காவல் அதிகாரி..
அதுவும் அவன் ஒரு தமிழன்...
ஆனா எமது நாட்டுல தான் சட்டம் எல்லாம் கிடையாதுல்ல...
எதிர்த்து கேள்வி கேட்டா உள்ள தூக்கி போடுவாங்க..
பயம் வேற...//இது தானே எங்கடை நாட்டிலை வழமை?? நல்ல வேளை தப்பிச்சீங்கள்???

வேத்தியன் on 27 March 2009 at 15:21 said...

கமல் said...

அந்த கேள்வி கேட்ட முட்டாள் இவ்வளத்துக்கும் பொலீஸோ, படை அங்கத்தவனோ கிடையாது...
அவன் ஒரு ஊர்காவல் அதிகாரி..
அதுவும் அவன் ஒரு தமிழன்...
ஆனா எமது நாட்டுல தான் சட்டம் எல்லாம் கிடையாதுல்ல...
எதிர்த்து கேள்வி கேட்டா உள்ள தூக்கி போடுவாங்க..
பயம் வேற...//இது தானே எங்கடை நாட்டிலை வழமை?? நல்ல வேளை தப்பிச்சீங்கள்???//

தப்பிச்சது..
அது தான் அன்றைய சாதனை...
:-)

அறிவே தெய்வம் on 27 March 2009 at 15:21 said...

\\அந்த கேள்வி கேட்ட முட்டாள் இவ்வளத்துக்கும் பொலீஸோ, படை அங்கத்தவனோ கிடையாது...
அவன் ஒரு ஊர்காவல் அதிகாரி..
அதுவும் அவன் ஒரு தமிழன்...\\

(சில)தமிழனின் ம்றுமுகம்..???

வேத்தியன் on 27 March 2009 at 15:23 said...

அறிவே தெய்வம் said...

\\அந்த கேள்வி கேட்ட முட்டாள் இவ்வளத்துக்கும் பொலீஸோ, படை அங்கத்தவனோ கிடையாது...
அவன் ஒரு ஊர்காவல் அதிகாரி..
அதுவும் அவன் ஒரு தமிழன்...\\

(சில)தமிழனின் ம்றுமுகம்..???//

ஆமாங்க...
சரியா சொன்னீங்க...

ஆ.ஞானசேகரன் on 27 March 2009 at 15:34 said...

உங்கடை நாட்டுல அருவிகள் நல்ல அழகாமே... பார்க்க ஆசைதான்ன்ன்.. ம்ம்ம்ம்ம்ம்ம்
என்று தனியுமோ தமிழனின் சுதந்திர தாகம்.... ஆனா ஒன்று சொன்னா கோவபடகூடாதுகோ,. சாதி மத வெறிதனம் என்று தமிழகளிடம் ஒழிக்கப்படுமோ அன்றுதான் முழு சுதந்திரம் அடையமுடியும்... இலங்கை தமிழர்களில் இன பற்றை விட சாதி வெறியும் அதிகம் உள்ளதை பார்த்திருக்கின்றேன்... நண்பரே.....

Rajeswari on 27 March 2009 at 15:40 said...

போட்டோ நீங்க எடுத்ததா??அழகா இருக்கு..

வேத்தியன் on 27 March 2009 at 15:41 said...

Rajeswari said...

போட்டோ நீங்க எடுத்ததா??அழகா இருக்கு..//

ஆமாங்க...
நன்றி நன்றி..
இயற்கை அழகு...

Rajeswari on 27 March 2009 at 15:41 said...

அவனோட ஐ.டி பாத்ததும் அவனைப் பாத்து கேட்டான் அந்த ஆளு, "நீ பேசாம கோயில்ல பூசை பண்ணிட்டு இருக்க வேண்டியது தானே, உனக்கு என்னத்துக்கு இந்த ட்ரிப் எல்லாம்???"...
இந்த கேள்வி கேட்டதும் எனக்கு கோபம் தலைக்கேறி விட்டது...//

சிலர் அப்படித்தான் வேத்தியன்..திருத்தவே முடியாது..

குடந்தைஅன்புமணி on 27 March 2009 at 15:48 said...

எங்கு சென்றாலும் தனது சாதிபுத்தியை விடமாட்டான் போல இந்த தமிழன்... என்று தணியும்... ஜாதி வெறி... அழகான அந்த மலைப்பிரதேசமும், சிற்றோடையும் கண்ணுக்கழகு...

வேத்தியன் on 27 March 2009 at 15:54 said...

Rajeswari said...

அவனோட ஐ.டி பாத்ததும் அவனைப் பாத்து கேட்டான் அந்த ஆளு, "நீ பேசாம கோயில்ல பூசை பண்ணிட்டு இருக்க வேண்டியது தானே, உனக்கு என்னத்துக்கு இந்த ட்ரிப் எல்லாம்???"...
இந்த கேள்வி கேட்டதும் எனக்கு கோபம் தலைக்கேறி விட்டது...//

சிலர் அப்படித்தான் வேத்தியன்..திருத்தவே முடியாது..//

ஆமாங்க...
கேவலமானவர்கள்...

வேத்தியன் on 27 March 2009 at 15:55 said...

குடந்தைஅன்புமணி said...

எங்கு சென்றாலும் தனது சாதிபுத்தியை விடமாட்டான் போல இந்த தமிழன்... என்று தணியும்... ஜாதி வெறி... அழகான அந்த மலைப்பிரதேசமும், சிற்றோடையும் கண்ணுக்கழகு...//

ஆமா ஆமா...
நன்றி அன்புமணி...

நட்புடன் ஜமால் on 27 March 2009 at 15:59 said...

தேயிலைத் தோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும் பார்க்க அருமையாக இருக்கும்...\\

உண்மைதான்

நல்லா இரசிக்க முடியும் ...

thevanmayam on 27 March 2009 at 16:08 said...

அங்கே எடுத்த இரண்டு படங்களைப் பாருங்கள், உங்களுக்கே புரியும் எவ்வளவு அழகு என்று.////

எல்லா ஊரிலும், நாட்டிலும்
மலைகளும்,,,

பள்ளங்களும்,,
இருக்கத்தான் செய்யும்!!!

thevanmayam on 27 March 2009 at 16:10 said...

நான் பஸ்ஸில் ஏறி உக்கார்ந்தேன்!!!
ஜாதி கேட்டான்!!!
நீங்க டூர் போனீங்க ! ஜாதியைப் பற்றி கேட்கிறான்!!!

கமல் on 27 March 2009 at 16:10 said...

அவனை விட உயர் அதிகாரி எல்லாம் நமக்கு தெரியும்..
அந்த விஷயம் தெரிஞ்ச உடனே போட்டிருந்த காட்சட்டை நனையாத குறையாக எம்மை அனுப்பி வைத்தான் அந்த ஆளு...
(ஏன் காட்சட்டை நனையும்ன்னு எல்லாம் கேள்வி கேக்கக் கூடாது என்னை... ஓகே??) :-)//

அடடா விசயம் இப்பிடியாகிட்ட்டோ??

உங்களுக்கு உயர் அதிகாரிகளை தெரியும் என்கிறதை நான் அறியாமல் இருந்திட்டேனே??

thevanmayam on 27 March 2009 at 16:11 said...

எங்கு சென்றாலும் தனது சாதிபுத்தியை விடமாட்டான் போல இந்த தமிழன்... என்று தணியும்... ஜாதி வெறி... அழகான அந்த மலைப்பிரதேசமும், சிற்றோடையும் கண்ணுக்கழகு.///

ஆமா! அன்புமணி!!

ஆதவா on 27 March 2009 at 17:19 said...

விடுங்க வேத்தியன்.... எப்படியோ சுற்றுலா நல்லபடியா போச்சுதல்லவா... அதுவே போதும். இரு படங்களும் கண்ணுக்குக் குளுமை! அதிலும் அந்த நீர்வீழ்ச்சி.....

இலங்கை ஒரு சுற்றுலா பிரதேசம்... குளுமை நிறைக்கும் வனம்.... இப்பொழுது குண்டுகள் நிறைந்து கொண்டிருக்கின்றன.

நட்புடன் ஜமால் on 27 March 2009 at 17:41 said...

\\அதுவும் அவன் ஒரு தமிழன்...\\

இது எதுக்குப்பா!

வேத்தியன் on 27 March 2009 at 20:06 said...

thevanmayam said...

நான் பஸ்ஸில் ஏறி உக்கார்ந்தேன்!!!
ஜாதி கேட்டான்!!!
நீங்க டூர் போனீங்க ! ஜாதியைப் பற்றி கேட்கிறான்!!!//

என்ன தான் பண்ணுறது இவங்களோட???

வேத்தியன் on 27 March 2009 at 20:07 said...

கமல் said...

அவனை விட உயர் அதிகாரி எல்லாம் நமக்கு தெரியும்..
அந்த விஷயம் தெரிஞ்ச உடனே போட்டிருந்த காட்சட்டை நனையாத குறையாக எம்மை அனுப்பி வைத்தான் அந்த ஆளு...
(ஏன் காட்சட்டை நனையும்ன்னு எல்லாம் கேள்வி கேக்கக் கூடாது என்னை... ஓகே??) :-)//

அடடா விசயம் இப்பிடியாகிட்ட்டோ??

உங்களுக்கு உயர் அதிகாரிகளை தெரியும் என்கிறதை நான் அறியாமல் இருந்திட்டேனே??//

ஏன்??
ஏதும் விசயமோ???
:-)

வேத்தியன் on 27 March 2009 at 20:08 said...

ஆதவா said...

விடுங்க வேத்தியன்.... எப்படியோ சுற்றுலா நல்லபடியா போச்சுதல்லவா... அதுவே போதும். இரு படங்களும் கண்ணுக்குக் குளுமை! அதிலும் அந்த நீர்வீழ்ச்சி.....

இலங்கை ஒரு சுற்றுலா பிரதேசம்... குளுமை நிறைக்கும் வனம்.... இப்பொழுது குண்டுகள் நிறைந்து கொண்டிருக்கின்றன.//

ஆமாங்க..
சரியா சொன்னீங்க ஆதவா...

வேத்தியன் on 27 March 2009 at 20:08 said...

நட்புடன் ஜமால் said...

\\அதுவும் அவன் ஒரு தமிழன்...\\

இது எதுக்குப்பா!//

ஓ இதை சொல்ல மறந்துட்டனா????
அவன் எங்களோட கதைச்சது சிங்களத்துல...

அ.மு.செய்யது on 28 March 2009 at 07:16 said...

இந்த மாதிரி இழிபிறவிகளை அஃறிணை உயிரினங்களாக கருதி, நம்ம வேலையைப் பார்த்துட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்..

Suresh on 28 March 2009 at 07:52 said...

vottum pottachu ...

ama avan ellam oru alau vidunga nanba ithu mari oru 40 peravathu thiriyuranga..

ungal pugaipadangalum athil elzhil konjum iyarkai alagum super ..

பழமொழி சரி :-)

Suresh on 28 March 2009 at 08:08 said...

@ வேத்தியன்

/வாழ்த்துகள் தல...
இன்னும் கொஞ்சம் சக்கரைய தூக்கலா போடுங்க இனிமேல்..
ஓகேவா???
:-)/

கண்டிப்பா :-) இனிமே துக்கலா போட்டுடுவோம் நன்றி வேத்தியன் உங்களிடம் இருந்து பறந்து வந்தது தான் இந்த :-) அன்பு :-)

வேத்தியன் on 28 March 2009 at 09:34 said...

அ.மு.செய்யது said...

இந்த மாதிரி இழிபிறவிகளை அஃறிணை உயிரினங்களாக கருதி, நம்ம வேலையைப் பார்த்துட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்..//

சரியா சொன்னீங்க செய்யது...

வேத்தியன் on 28 March 2009 at 09:35 said...

Suresh said...

vottum pottachu ...

ama avan ellam oru alau vidunga nanba ithu mari oru 40 peravathu thiriyuranga..

ungal pugaipadangalum athil elzhil konjum iyarkai alagum super ..

பழமொழி சரி :-)//

நன்றி சுரேஷ்...

அகநாழிகை on 28 March 2009 at 18:54 said...

வேத்தியன், வணக்கம்.
உங்கள் பதிவு நன்றாக இருந்தது.

//நாயை கழுவி நடு வீட்டுல வச்சாலும்//
உண்மைதான்... இப்படியும் சில ஈனப் பிறவிகள் இருக்கத்தான் செய்கின்றன.

உங்கள் மற்ற பதிவுகளையும் வாசித்துவிட்டு பிறகு வருகிறேன்.
நன்றி.

- பொன். வாசுதேவன்

வேத்தியன் on 28 March 2009 at 22:27 said...

அகநாழிகை said...

வேத்தியன், வணக்கம்.
உங்கள் பதிவு நன்றாக இருந்தது.

//நாயை கழுவி நடு வீட்டுல வச்சாலும்//
உண்மைதான்... இப்படியும் சில ஈனப் பிறவிகள் இருக்கத்தான் செய்கின்றன.

உங்கள் மற்ற பதிவுகளையும் வாசித்துவிட்டு பிறகு வருகிறேன்.
நன்றி.

- பொன். வாசுதேவன்//

மிக்க நன்றி...
அகநாழிகை, பெயர் நன்றாக இருக்கின்றது...
:-)

Malmarugan said...

போட்டோ எடுத்தது இந்த வேத்தியன் இல்லை!!!அதனை எடுத்தது சக வேத்தியன்

எம்.எம்.அப்துல்லா on 29 March 2009 at 23:00 said...

//கேவலமான கேள்வியும்..." //

உங்க ஊர்லயுமா??

:((

எம்.எம்.அப்துல்லா on 29 March 2009 at 23:03 said...

நானும்,என் மனைவியும் தேன்நிலவுக்கு உங்க நாட்டின் மலைப்பிரதேசமான நுவரேலியாவுக்குத்தான் வந்தோம். ஒரு வாரம் அங்கு இருந்தோம். வேர்ல்ட்ஸ் எண்ட் என்ற பகுதி எங்களால் இன்றும் மறக்க முடியாத இடம்.

:)

வேத்தியன் on 30 March 2009 at 10:12 said...

Malmarugan said...

போட்டோ எடுத்தது இந்த வேத்தியன் இல்லை!!!அதனை எடுத்தது சக வேத்தியன்//

சரிப்பா விடு...
:-)

வேத்தியன் on 30 March 2009 at 10:12 said...

எம்.எம்.அப்துல்லா said...

//கேவலமான கேள்வியும்..." //

உங்க ஊர்லயுமா??

:((//

ஆமாங்க..
என்ன பண்றது ???

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.