தற்போது உலகில் சூழல் மாசடைதல் பற்றி எல்லோரிடத்திலும் விழிப்பு வந்துள்ளது...
அதனால் மரம் வளர்ப்பு,தோட்டச் செய்கையில் பலருக்கு ஆசையும் வந்துள்ளது...
இங்கே ஜப்பான் நாட்டின் வித்தியாசமான தோட்ட அமைப்பு முறைகள் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்...
ஜப்பான் நாட்டின் தோட்ட முறைகள் மிகவும் பிரசித்தமானது.
ஜப்பான் நாட்டிலுள்ள தோட்டங்கள் மேலைத்தேய தோட்டங்களைப் போலிருக்காது...
ஒரு தோட்டம் செய்யும் இடத்தை முழுவதுமாக நிரப்பி அந்த இடம் முழுவதும் பூச்செடிகள், மரங்கள் என வளர்ந்திருக்கும்...
ஜப்பான் தோட்டங்களின் ஸ்டைல்களில் Natural Gardensஉடன் பலரும் பழகியிருப்பர்..
ஆனால் மற்ற ஸ்டைல்களில் அவ்வளவு பழக்கம் இருக்காது...
ஜப்பான் தோட்ட அமைப்புகளில் மனதை ஒருமுகப் படுத்தும் தன்மையை அதிகம் வரவழைக்கக் கூடியதாக இருக்குமாம்...
இங்கே 5 வகையான ஜப்பான் தோட்ட அமைப்புகளிப் பார்க்கலாம்...
1. Flat Sea Gardens
பெயரில் sea என வருவதால் இந்த தோட்டத்தில் நீர் அபாயம் எதுவும் இருப்பதில்லை...
இந்த வகையான தோட்டங்களில் நீர்த்தன்மை குறைவு..
மரங்களும் சிறிய அளவிலேயே இருக்கும்...
இந்த வகியான தோட்டங்களில் பின்னனிச் சூழலாக இருப்பது கறுப்பு பைன் மரங்களாகும்...
பெயரில் sea என இருப்பதன் காரணம், இதில் உள்ள மண் ஆனது கடலில்
இதில் கல்லை சுற்றியுள்ள மண்ணானது கடலில்
அலைகளைப் போல காணப்படுகிறது...
அலையைப் போல வளைந்து நெளிந்து இருக்குமாம்...
மற்ற தோட்டங்களைப் போலவே இதிலும் சில இடங்களில் இளைப்பாறுவதற்காக இருக்கைகள் போடப்பட்டிருக்கும்...
2. Strolling Pond Gardens
பெயருக்கு ஏற்றது போல இதில் மத்தியில் ஒரு குளம் இருக்கும்...
குளத்தைச் சுற்றி மரங்கள் இருக்கும்...
சுற்றியுள்ள பாதைகள் கிளைகளாக பிரிந்து பல இடங்களில், இளைப்பாற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்...
சாதாரண தோட்டங்களைப் போலவே இந்த தோட்டத்திலும் மரங்கள் அதிகமாக இருக்குமாம்...
இயற்கையான தோட்டங்கள போலல்லாது, இதில் சிறு பாலங்கள்,கற்கள் என மனிதனால் செய்யப்பட்ட பொருட்களும் இருக்கும்...
3. Natural Gardens
இது தான் ஜப்பான் தோட்ட முறைகளில் மிகவும் எளிதானது...
இதில் அரிதாகவே பொருட்கள் இருக்குமாம்.. (பாலம்,கற்கள்,சிலைகள்)
இது பார்ப்பதற்கு காடு போல தோன்றும்...
இதன் வடிவமைப்பாளர்கள் இது மனதிற்கு மிகவும் அமைதியை தருவதாக நம்புகிறார்களாம்...
இது முழுதுமாக மரங்களால் நிரப்பப்பட்டிருக்கும் தோட்டங்கள்..
மூங்கில்,பன்னங்கள் என மரங்களில் வகைப்பாடுகள் இருக்கும்...
மரங்கள் அடர்த்தியாக இருப்பதால் நிழலாக இருக்குமாம்..
பச்சைப் பசேலாக காணப்படும்.
இந்த தோட்டங்கள் மனதிற்கு அமைதியை தரும் வண்ணம் தான் அமைக்கப்பட்டிருக்கும்...
4. Tea Gardens
சென் துறவிகள் (Zen Monks) ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்ட காலத்தில் தியான நேரத்தில் தூக்கத்தைக் குறைப்பதற்காகொரு வகையான சக்தியேற்றிய தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்ததாம்...
அந்த தேவைக்காக உருவாக்கப்பட்ட தோட்ட முறை தான் இது...
இந்த வகையான தோட்டங்கள் அமைதியை கொண்டுவரக்கூடிய ஒரு அமைப்பு முறையில் காணப்படுமாம்...
மத்தியில் சம்பிரதாய Tea House இருக்குமாம்...
மத்தியில் இருக்கும் டீ ஹவுஸை சுற்றி ஆட்கள் இருக்கும் வகையில் அமைப்பு காணப்படுமாம்...
இந்த முறையிலான தோட்டங்கள் சம்பிரதாய தேவைகளுக்கு மட்டுமே ஆக்கப்படும்...
5. Paradise Gardens
இது 6வது நூற்றாண்டில் சீனர்களால் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதாம்...
இதன் காரணமாக இந்த வகையான தோட்டங்களில் ஆரம்ப காலங்களில் சீன ஆதிக்கம் அதிகமாக இருந்தது...
இது குளங்கள், தாமரைத் தடாகங்கள் என அழகாக இருக்குமாம்...
இதில் ஒரு குளத்துக்கு நடுவில் தீவு போல ஒரு சிறு நீர்ப்பரப்பு இருக்குமாம்...
இது ஜப்பானில் ஜூடோ புத்த மார்க்கம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அமைக்கப் பட்டது..
மிக சிறிய அளவிலேயே இருக்கின்றது...
அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
Subscribe to:
Post Comments (Atom)
34 . பின்னூட்டங்கள்:
first attendance pottukkiren vethiyan
சமூக அக்கறையுடன் இருக்கு நண்பா..
ஜப்பானியர்கள் செய்வதை திருந்தச் செய்வதில் மிகச் சிறந்த வல்லுனர்கள். அது தோட்டக்கலையாக இருந்தாலும் சரி, மொட்டை மாடியில் வயல் அமைத்து அறுவடை செய்வதிலும் சரி, அவர்களுக்கு நிகர் அவர்களே.
வழக்கம் போல் நல்ல பதிவு வேத்தியன்
இந்த முறைகள் நம்ம நாட்டில் சாத்தியப்படுமா?
அழகாக்கீதே
பயனுள்ள பதிவு நண்பா.. வாழ்த்துக்கள்..
இயற்கையின் சீற்றத்தால் நிலைகுலைந்த இவர்களின் இயற்கையின் மேல் உள்ள காதல் அளவற்றது.
Syed Ahamed Navasudeen said...
first attendance pottukkiren vethiyan//
வாங்க நவாஸுதீன்...
கார்த்திகைப் பாண்டியன் said...
சமூக அக்கறையுடன் இருக்கு நண்பா..//
மிக்க நன்றி...
Syed Ahamed Navasudeen said...
ஜப்பானியர்கள் செய்வதை திருந்தச் செய்வதில் மிகச் சிறந்த வல்லுனர்கள். அது தோட்டக்கலையாக இருந்தாலும் சரி, மொட்டை மாடியில் வயல் அமைத்து அறுவடை செய்வதிலும் சரி, அவர்களுக்கு நிகர் அவர்களே.
வழக்கம் போல் நல்ல பதிவு வேத்தியன்//
ஆமாங்க, சரியா சொன்னீங்க...
மிக்க நன்றி...
கார்த்திகைப் பாண்டியன் said...
இந்த முறைகள் நம்ம நாட்டில் சாத்தியப்படுமா?//
கஷ்டம் தான் நண்பா...
ஆனால் இயற்கை மேல் அவர்கள் கொண்டுள்ள காதல் அளவற்றது...
நட்புடன் ஜமால் said...
அழகாக்கீதே//
வாங்க ஜமால் அண்ணே...
அப்பிடியா???
நன்றி...
கார்த்திகைப் பாண்டியன் said...
பயனுள்ள பதிவு நண்பா.. வாழ்த்துக்கள்..//
மிக்க நன்றி நண்பா...
எலெக்ட்ரானிக்ஸ் என்றாலும், இயற்கை அழகை செயற்கையாய் உருவாக்குவது என்றாலும் இவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். இவர்கள் உழைக்கப்பிறந்தவர்கள்
ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வந்ததா கேள்வி
எப்போ கிளம்புறீங்க
அபுஅஃப்ஸர் said...
ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வந்ததா கேள்வி
எப்போ கிளம்புறீங்க//
அப்பிடியா???
நாம எல்லாம் சின்ன வயசிலயே காதை குத்த விடல்ல..
இப்பவா விடுவோம்???
:-)
நன்னாயிருக்கு அண்ணா...
வேத்தியன்-சான்,
அரிய தகவல்களை அழகான முறையில் தொகுத்தமைக்கு தோ மாரியாத்தோ !!
Anbu said...
நன்னாயிருக்கு அண்ணா...//
நன்றி...
அ.மு.செய்யது said...
வேத்தியன்-சான்,
அரிய தகவல்களை அழகான முறையில் தொகுத்தமைக்கு தோ மாரியாத்தோ !!//
ஐயா, என்னாதிது??
ஏதாச்சும் கெட்ட வார்த்தையா???
விளங்கலை..
நல்லதா தான் சொல்லுறீங்கன்னு நினைச்சு நன்றி சொல்லிக்கிறேன்...
அடடா!!! அருமை வேத்தியன்....
இந்த தகவல்களை சற்று அதிகமாக கொடுத்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்... (விகடன் கூட தேர்ந்தெடுக்கும்)
(வேலைப்பளு மக்கா... அதான் இந்த அவசர பின்னூட்டம்!)
தேவையான பதிவு வேத்தியன்... இலங்கையில் இயற்கை சூழல்கள் அதிகம்.. உங்களின் அனுபவங்களையும் சொல்லுங்கள்....
ஜப்பானில் வேந்தியன்
நல்லா இருக்கே....அழகாவும் இருக்கு......அவங்க இருக்குறதே தீவு மாதிரி இத்தினிகொனு இடம்...அதுல என்ன எல்லாம் பண்றாங்க ...
ஆதவா said...
அடடா!!! அருமை வேத்தியன்....
இந்த தகவல்களை சற்று அதிகமாக கொடுத்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்... (விகடன் கூட தேர்ந்தெடுக்கும்)
(வேலைப்பளு மக்கா... அதான் இந்த அவசர பின்னூட்டம்!)//
ஆஹா அவ்வளவு நல்லா இருக்கா??
மிக்க நன்றி ஆதவா...
வேலைகளுக்கு மத்தியிலும் பின்னூட்டியதற்கு நன்றி...
ஆ.ஞானசேகரன் said...
தேவையான பதிவு வேத்தியன்... இலங்கையில் இயற்கை சூழல்கள் அதிகம்.. உங்களின் அனுபவங்களையும் சொல்லுங்கள்....//
நிறைய இருக்கு...
கண்டிப்பாக சொல்கிறேன்...
நசரேயன் said...
ஜப்பானில் வேந்தியன்//
ஆஹா...
இன்னும் கிளம்பலை..
இனித்தான்...
:-)
நிலாவும் அம்மாவும் said...
நல்லா இருக்கே....அழகாவும் இருக்கு......அவங்க இருக்குறதே தீவு மாதிரி இத்தினிகொனு இடம்...அதுல என்ன எல்லாம் பண்றாங்க ...//
ஆமாங்க...
அந்த சின்ன இடத்துலயும் இவ்வளவு அழகா செய்றாங்க...
நன்றி...
நல்ல தகவல்கள்...நன்றி
மிக நல்ல தகவல்கள்... தயவு செய்து எங்கிருந்து சேகரித்தீர்களென்று சொல்ல முடியுமா?
Rajeswari said...
நல்ல தகவல்கள்...நன்றி//
நன்றிங்க...
புல்லட் பாண்டி said...
மிக நல்ல தகவல்கள்... தயவு செய்து எங்கிருந்து சேகரித்தீர்களென்று சொல்ல முடியுமா?//
இது பற்றி நான் ஏற்கனவே வாசித்துள்ளேன்...
இது எழுதுவதற்காக www.howstuffworks.comஇல் இருந்து தகவல்கள் பெற்றேன்...
நன்றி...
நல்லதொரு சூழல சம்பந்தமான பதிவு
வேத்தி. வாசித்தேன், வாழ்ந்தேன்...
SASee said...
நல்லதொரு சூழல சம்பந்தமான பதிவு
வேத்தி. வாசித்தேன், வாழ்ந்தேன்...//
மிக்க நன்றி சசி...
Post a Comment