Wednesday, 18 March 2009

இரண்டாம் கையால் புகைப்பது எப்பிடி தெரியுமா ?


முதல்ல பாஸிவ் ஸ்மோக்கிங் (Passive Smoking/Second Hand Smoking) என்றால் என்னான்னு சொல்லிடுறேன்...

சிகரட் பிடிப்பவர்களை பாத்திருப்பீங்க... (நீங்களும் புடிச்சிருப்பீங்க... :-) )
அவன் Active Smoker. அவனுக்கு பக்கத்துல இருந்து வேடிக்கை பாக்கிறவன் Passive Smoker...
ஏன்னா Active Smokerவிட்ற புகையையும் சிகரெட்ல இருந்து வர்ற புகையையும் சேர்த்து பிடிக்கிறதால தான் இவன் Second Hand Smokerன்னு அழைக்கப்புடுறான்...
அதாவது ஒரு வீட்ல கணவன்/அப்பா சிகரெட் புடிக்கிறதா இருந்தா கண்டிப்பா மனைவி/பிள்ளைகள் Passive Smokerஆ இருப்பாங்க... (அது அவங்க தப்பில்லை...)
இவ்ளோ தான் மேட்டர்... என்ன புரிஞ்சுதா ???ஒரு சிகரெட் புடிக்கிற சந்தர்ப்பத்தை மனசுல நினைச்சுக்கோங்க...
சிகரெட் பிடிக்கும் Active Smoker ஆனவன், சிகரெட்ல இருந்து ஃபில்டர்க்குள்ளால உறிஞ்சி எடுக்குற புகையை மாத்திரமே உள்ளே எடுப்பான்.
ஆனா அவனுக்கு பக்கத்துல இருக்கிற Passive Smoker ஆனவன் சிகரெட் நுனியில இருந்து வர்ற புகை + Active Smoker விட்ற புகை ஆகியதை உள்ளே எடுக்கும் பாவப்பட்ட நிலைக்கு ஆளாகி விடுவான்...

Active Smoker ஆனவன் புகையை உறிஞ்சி எடுக்கும் போது நல்ல ஒக்சிஜன் செறிவோடு தான் உள்ளே எடுப்பான். அதனால சிகரெட்ல இருக்குற 200க்கும் மேற்பட்ட நச்சு மூலக்கூறுகள்ல சில பிரிந்தழிந்து தான் உள்ளே வரும்.
ஆனா Passive Smoker ஆனவன் சிகரெட் நுனியில இருந்து வர்ற புகையை உள்ளே எடுக்குறதால ஒக்சிஜன் செறிவு குறைவா தான் வரும். அதனால சிகரெட்ல இருக்குற சகல மூலக்கூறுகளும் உள்ளே வரும். அத்துடன், Active Smoker விட்ற புகையை உள்ளே எடுக்குறதால அவனோட காபன்டைஒக்சைடு (CO2), கிருமிகள் எல்லாம் சேர்ந்து தான் இவன் உள்ளே எடுப்பான்...

Second Hand Smokingஐ எவ்வாறு தவிர்ப்பது ???

நீங்க சிகரெட் பிடிக்காம இருந்தாலும் சிகரெட் பிடிப்பவர் பக்கத்துல போகாதீங்க... அப்பிடி பார்ட்டி எதுலயும் பக்கத்துல இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தாலும் காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையிலேயே இருக்க முயற்சி செய்யுங்க...

நண்பர்கள் ஒன்னா இருக்கும் போது சிகரெட் பிடிப்பவனுக்கு "சிகரெட் பிடிக்காதே"ன்னு அறிவுரை சொன்னா கண்டிப்பா கேக்க மாட்டாங்க... அதனால "குறைஞ்சது புகையை என்னோட பக்கம் ஊதாம மத்த பக்கமா பாத்து ஊது"ன்னு சொல்லிருங்க...

இவ்ளோ தான் இப்போதைக்கு டிப்ஸ்...
இன்னும் ஏதாவது தோனிச்சுனா பின்னூட்டத்துல சொல்றேனே...
டாக்டர் தேவாகிட்ட இதுக்கு டிப்ஸ் சொல்லிடுங்கன்னு அவர்கிட்டேயே இந்த மேட்டரை விட்டுரலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்...
:-)

ஒருத்தன் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாதவனா இருந்தாலும் சிகரெட் பிடிக்கிறவனுக்கு பக்கத்துல இருந்தா Active Smokerக்கு வர்ற அதே பிரச்சினைகள் உங்களுக்கும் வரும் !சராசரியாக ஒரு சிகரெட் பிடிக்கும் போது வாழ்நாட்களில் 14 நிமிடங்கள் குறையுமாம்...

இப்போ புரிஞ்சிருக்குமே தலைப்பு !!!
சும்மா ஒரு எஃபெக்ட்டுக்கு தான் மொழிபெயர்ப்பு எல்லாம்...
:-)

இது பத்தி மேலதிகமா வாசிக்க கீழே ஒவ்வொரு த்லைப்புலயும் லிங்க் கொடுத்திருக்கேன்...
கண்டிப்பா வாசிச்சுப் பாருங்க...
தகவல்கள் www.howstuffworks.comஇல் இருந்து பெறப்பட்டன.

Secondhand Smoke Overview

What is Secondhand Smoke?

The Health Effects of Secondhand Smoke

How to Avoid Secondhand Smoke

இந்த படைப்பு பிடிச்சிருந்தா ஒரு ஓட்டை குத்திட்டு போங்க மாப்ஸ்...


Smoking Causes Cancer
இரண்டாம் கையால் புகைப்பது எப்பிடி தெரியுமா ?SocialTwist Tell-a-Friend

25 . பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் on 18 March 2009 at 17:20 said...

தகவல் களஞ்சியமா இருக்கியளே

அ.மு.செய்யது on 18 March 2009 at 17:22 said...

//நீங்க சிகரெட் பிடிக்காம இருந்தாலும் சிகரெட் பிடிப்பவர் பக்கத்துல போகாதீங்க... அப்பிடி பார்ட்டி எதுலயும் பக்கத்துல இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தாலும் காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையிலேயே இருக்க முயற்சி செய்யுங்க...
//

ந‌ல்ல அறிவுரை வேத்திய‌ன்...

ஆக்சுவ‌ல்லி..நான் கூட‌ பேஸிவ் ஸ்மோக‌ர் தான்...எப்படி த‌விர்ப்ப‌து என்று ப‌ல‌முறை யோசித்திருக்கிறேன்.

அ.மு.செய்யது on 18 March 2009 at 17:24 said...

//நட்புடன் ஜமால் said...
தகவல் களஞ்சியமா இருக்கியளே
//

அது எப்படிங்க..இவ்ளோ ஃபார்ஸ்டா வர்றீங்க..

பிளாக்ஸ்பாட்ட ரெஃப்ரெஷ் பண்ணி, புது பதிவு வந்த வுடனே ஆட்டோமேடிக்கா மெயில் டிரிக்கர் ஆவுற மாதிரி எதாவது ஸ்கிரிப்ட் எழுதி வெச்சிருக்கீங்களா...

இருந்தா எனக்கும் அனுப்பி வுடுங்க..

ஆதவா on 18 March 2009 at 17:27 said...

அட.... ஜமாலா??? இந்தமுறை மிஸ்பண்ணீட்டானா//

ஆதவா on 18 March 2009 at 17:29 said...

அய்யய்யோ!! மிஸ் பண்ணீட்டேனா என்பதற்கு மாத்தி அடிச்சுப்புட்டேன்..

சாரி ஜமால்..

வேத்தியன் on 18 March 2009 at 17:30 said...

// நட்புடன் ஜமால் said...

தகவல் களஞ்சியமா இருக்கியளே //


எல்லாம் வாசிச்சு அறிஞ்சது தாங்க...

ஆதவா on 18 March 2009 at 17:31 said...

அவனுக்கு பக்கத்துல இருந்து வேடிக்கை பாக்கிறவன் Passive Smoker...
////
ப்ராப்ளம் அதிகம் வரும்!!!

வேத்தியன் on 18 March 2009 at 17:31 said...

// அ.மு.செய்யது said...

//நீங்க சிகரெட் பிடிக்காம இருந்தாலும் சிகரெட் பிடிப்பவர் பக்கத்துல போகாதீங்க... அப்பிடி பார்ட்டி எதுலயும் பக்கத்துல இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தாலும் காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையிலேயே இருக்க முயற்சி செய்யுங்க...
//

ந‌ல்ல அறிவுரை வேத்திய‌ன்...

ஆக்சுவ‌ல்லி..நான் கூட‌ பேஸிவ் ஸ்மோக‌ர் தான்...எப்படி த‌விர்ப்ப‌து என்று ப‌ல‌முறை யோசித்திருக்கிறேன்.


நன்றி செய்யது...
நானுந்தேன்... யோசிச்சதன் விளைவு தான் இது...
:-)
உண்மையா இந்த அறிவுரை எனது நண்பன் சொன்னது...
நன்றி நிஷாந்தன்...

வேத்தியன் on 18 March 2009 at 17:32 said...

இப்போ சிறிது வேலை...
இரவு வந்து பதில் பின்னூட்டம் போடப்படும்...

Anonymous said...

ஆனா அவனுக்கு பக்கத்துல இருக்கிற Passive Smoker ஆனவன் சிகரெட் நுனியில இருந்து வர்ற புகை + Active Smoker விட்ற புகை ஆகியதை உள்ளே எடுக்கும் பாவப்பட்ட நிலைக்கு ஆளாகி விடுவான்...////

என்ன கொடும வேத்தி!

சந்துரு கலக்கற ன்ற மாதிரி வேத்தி கலக்கறனு சொல்ல ஆரம்பிச்சாச்சிபா.... :)

ஆதவா on 18 March 2009 at 17:36 said...

00க்கும் மேற்பட்ட நச்சு மூலக்கூறுகள்ல சில பிரிந்தழிந்து தான் உள்ளே வரும்.

ஓஒ!!!!!!

ஆதவா on 18 March 2009 at 17:49 said...

Smoking Causes Cancer

உண்மைதான்.... எனக்கு ஸ்மோகிங் பழக்கம் இல்லை!!! தப்பிச்சேன்!!

வேத்தியன் on 18 March 2009 at 18:21 said...

// ஷீ-நிசி said...

ஆனா அவனுக்கு பக்கத்துல இருக்கிற Passive Smoker ஆனவன் சிகரெட் நுனியில இருந்து வர்ற புகை + Active Smoker விட்ற புகை ஆகியதை உள்ளே எடுக்கும் பாவப்பட்ட நிலைக்கு ஆளாகி விடுவான்...////

என்ன கொடும வேத்தி!

சந்துரு கலக்கற ன்ற மாதிரி வேத்தி கலக்கறனு சொல்ல ஆரம்பிச்சாச்சிபா.... :) //


அய்யய்யோ...
அதெல்லாம் வேணாமே...

Rajeswari on 18 March 2009 at 18:21 said...

தப்பு செயரவன விட ,தப்பு செய்ய தூண்டுரவனுக்கு தான் தண்டனை ஜாஸ்தி= பழைய மொழி.
சிகரெட் புகைப்பவனை விட, புகைக்கும் போது கூட இருக்கிரவனுக்குதான் நோய் ஜாஸ்தி=புது மொழி ...ஹா ஹா ஹா ..கண்ணா கேட்டுக்கோ ...வேதியன் அண்ணா சொல்லுறத பாலோ பண்ணிக்கோ வர்ட்டா ..

வேத்தியன் on 18 March 2009 at 18:21 said...

// ஆதவா said...

Smoking Causes Cancer

உண்மைதான்.... எனக்கு ஸ்மோகிங் பழக்கம் இல்லை!!! தப்பிச்சேன்!! //


நானுந்தாங்க...

வேத்தியன் on 18 March 2009 at 18:30 said...

// Rajeswari said...

தப்பு செயரவன விட ,தப்பு செய்ய தூண்டுரவனுக்கு தான் தண்டனை ஜாஸ்தி= பழைய மொழி.
சிகரெட் புகைப்பவனை விட, புகைக்கும் போது கூட இருக்கிரவனுக்குதான் நோய் ஜாஸ்தி=புது மொழி ...ஹா ஹா ஹா ..கண்ணா கேட்டுக்கோ ...வேதியன் அண்ணா சொல்லுறத பாலோ பண்ணிக்கோ வர்ட்டா //


ஆஹா இது நல்லா கீதே...
அதுசரி, ஏங்க அந்த அண்ணா எல்லாம்???
நான் ரொம்ப சின்னவன்ங்க...
நம்புங்க...
:-)

அபுஅஃப்ஸர் on 18 March 2009 at 19:08 said...

தகவல் பெட்டகம்மே நன்றிங்கோ, இதெல்லாம் தெரிஞ்சதுதான், இருந்தாலும் இந்த கண்ராவியை வுடுராங்களா?? ஹி ஹி

அபுஅஃப்ஸர் on 18 March 2009 at 19:11 said...

//குறைஞ்சது புகையை என்னோட பக்கம் ஊதாம மத்த பக்கமா பாத்து ஊது"ன்னு சொல்லிருங்க...
//

இதை நா அடிக்கடி சொல்லி சொல்லி சொல்லி நா செத்துப்போச்சிங்க‌

வேத்தியன் on 18 March 2009 at 21:07 said...

// அபுஅஃப்ஸர் said...

தகவல் பெட்டகம்மே நன்றிங்கோ, இதெல்லாம் தெரிஞ்சதுதான், இருந்தாலும் இந்த கண்ராவியை வுடுராங்களா?? ஹி ஹி //


நன்றிங்க...
அதாங்க மேட்டரே...

நசரேயன் on 18 March 2009 at 21:30 said...

//இந்த படைப்பு பிடிச்சிருந்தா ஒரு ஓட்டை குத்திட்டு போங்க மாப்ஸ்..//
சரி மாப்ஸ்

வேத்தியன் on 18 March 2009 at 21:32 said...

// நசரேயன் said...

//இந்த படைப்பு பிடிச்சிருந்தா ஒரு ஓட்டை குத்திட்டு போங்க மாப்ஸ்..//
சரி மாப்ஸ் //


சந்தோஷம்...
நன்றிங்க...

thevanmayam on 18 March 2009 at 21:37 said...

முதல்ல பாஸிவ் ஸ்மோக்கிங் (Passive Smoking/Second Hand Smoking) என்றால் என்னான்னு சொல்லிடுறேன்...

thevanmayam on 18 March 2009 at 21:42 said...

பாஸிவ் ஸ்மோக்கர் தகவல் நல்ல தகவல்

வேத்தியன் on 18 March 2009 at 21:44 said...

// thevanmayam said...

பாஸிவ் ஸ்மோக்கர் தகவல் நல்ல தகவல் //


நன்றி நன்றி...

சுரேஷ் குமார் on 4 April 2009 at 11:51 said...

அய்யய்யோ.. இப்போ கணக்கு பாத்தா, இதுவரைக்கும் நா பல நூறு (பல ஆயிரமா கூட இருக்கலாம்) தம் அடிச்சுட்டேன் போல.. இத்தனைக்கும் நான் Passive Smoker தானுங்க..

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.