Sunday, 15 March 2009

தமிழர் இசைக்கருவிகள்...


இப்போ நம் மத்தியில் எவ்வளவோ இசைக்கருவிகள் பரந்து வந்துவிட்டன...
எவ்வளவு தான் வந்தாலும் நம் தமிழர் கலாச்சாரத்தையும் அதன் பின்னணியையும் பிரதிபலிப்பன நம் இசைக் கருவிகள் தானே ???

அவை பற்றி எழுத நினைத்ததன் பலன் தான் இந்தப் பதிவு...
இதில் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் தமிழர் கலாச்சாரத்தோடு தற்போது தொடர்புடையவை எனினும், தமிழரால் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது சிறிது சந்தேகம் தான்...
விஷயம் அறிந்தவர்கள் கூறவும்...
அந்தந்த இசைக் கருவிகள் பற்றி விஷயமுள்ள தொடுப்புக் கொடுத்துள்ளேன்...
(தொடுப்பு கொடுத்த இசைக் கருவிகள் ஊதா நிறத்தால் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது)
வாசித்து அறிக...

பிரதானமாக இசைக்கருவிகளை நான்கு வகையாக பிரிப்பர்...
அவையாவன :
1. தோற் கருவிகள்
2. துளைக் கருவிகள்
3. நரம்புக் கருவிகள்
4. கஞ்சக் கருவிகள்

தோற் கருவிகள்...
விலங்குத் தோலை பயன்படுத்தி செய்யப்படும் இசை கருவிகள் இவற்றில் அடங்கும்...

பொரும்பறை
சிறுபறை
பேரிகை
படகம்
இடக்கை
உடுக்கை
மத்தளம்
சல்லிகை
காடிகை
திமிலை
குடமுழா
தக்கை
கணப்பறை
தமடூகம்
தண்ணுமை
தடாரி
அந்தரி
முழவு
சந்திர வலையம்
மொந்தை
பாகம்
கஞ்சிரா
ஜெண்டை
பஞ்சமுக வாத்தியம்
கிரிக்கட்டி
உபாங்கம்
துடி
நாளிகைப்பறை
உறுமி மேளம்
தவில்
மிருதங்கம்
பஞ்சறை மேளம்
பறை

துளைக் கருவிகள்...
இவை காற்றினால் உந்தப்பட்டு இயக்கப்படும். சுவாசத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இவைகளில் நாதம் எழுகின்றது...

புல்லாங்குழல்
முகவீணை

மகுடி
சங்கு
தாரை
கொம்பு
எக்காளை

நாதஸ்வரம்
ஒத்து


நரம்புக் கருவிகள்...
சுருதிக்கு அடிப்படையாக விளங்கும் வாத்தியங்கள் இவை...

யாழ்
வீணை
தம்புரா
கோட்டு வாத்தியம்


கஞ்சக் கருவிகள்...
இவை அனேகமாக உலோகம் கொண்டு ஆக்கப்பட்ட இசைக் கருவிகளாகும்...

சேமக்கலம்
ஜாலரா
கடம்
ஜலதரங்கம்
முகர்சிங்
கொத்துமணி


உங்கள் கருத்துகளைக் கூறி விட்டுச் செல்லவும்...
தமிழர் இசைக்கருவிகள்...SocialTwist Tell-a-Friend

41 . பின்னூட்டங்கள்:

தமிழ் மதுரம் on 15 March 2009 at 15:01 said...

அப்ப நீங்களும் இசை ஞானம் அறிந்த வித்துவான் தான்?? உங்களிட்டையும் சங்கீதம் படிக்கலாம் போல இருக்கே??

இன்று தான் அநேக இசைக் கருவிகளை இப் பதிவினூடாக அறிந்துள்ளேன்.

வேத்தியன் on 15 March 2009 at 15:03 said...

கமல் said...

அப்ப நீங்களும் இசை ஞானம் அறிந்த வித்துவான் தான்?? உங்களிட்டையும் சங்கீதம் படிக்கலாம் போல இருக்கே??

இன்று தான் அநேக இசைக் கருவிகளை இப் பதிவினூடாக அறிந்துள்ளேன்.//

அட, நீங்க வேற...
ஆளை விடுங்க சாமி...
ஏதோ நாமளே அங்க ஒன்னு இங்க ஒன்னா கொஞ்சம் படிச்சிருக்கோம்... நம்ம கிட்ட போயி சங்கீதம்...
:-)

இராகவன் நைஜிரியா on 15 March 2009 at 15:43 said...

எல்லோருக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு இசைக் கருவி..

ஜால்ரா...

என்ன வேத்தியன் நான் சொல்றது சரிதானுங்களே..

வேத்தியன் on 15 March 2009 at 15:44 said...

// இராகவன் நைஜிரியா said...

எல்லோருக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு இசைக் கருவி..

ஜால்ரா...

என்ன வேத்தியன் நான் சொல்றது சரிதானுங்களே..//


சரிதான் சரிதான்...
:-)

இராகவன் நைஜிரியா on 15 March 2009 at 15:45 said...

பஞ்சமுக வாத்தியம்...

திருவாரூர் கோயிலில் வைக்கப்பட்டு இருக்கும்.

சுமார் 20 வருடங்களுக்கு முன் அங்கு சென்று இருந்தபோது ஒரு வயதானவர் அதை வாசித்துக் காண்பித்தார்.

அதன் பின் அந்த வாத்தியத்தை எங்கும் பார்ததாக ஞாபகம் இல்லை.

இராகவன் நைஜிரியா on 15 March 2009 at 15:45 said...

// எவ்வளவு தான் வந்தாலும் நம் தமிழர் கலாச்சாரத்தையும் அதன் பின்னணியையும் பிரதிபலிப்பன நம் இசைக் கருவிகள் தானே ???
//

ஆமாம். இசைக்கு மயங்காதவர்கள் உண்டோ..

இராகவன் நைஜிரியா on 15 March 2009 at 15:46 said...

// அவை பற்றி எழுத நினைத்ததன் பலன் தான் இந்தப் பதிவு...//

நல்ல நினைப்புங்க...

வேத்தியன் on 15 March 2009 at 15:46 said...

// இராகவன் நைஜிரியா said...

பஞ்சமுக வாத்தியம்...

திருவாரூர் கோயிலில் வைக்கப்பட்டு இருக்கும்.

சுமார் 20 வருடங்களுக்கு முன் அங்கு சென்று இருந்தபோது ஒரு வயதானவர் அதை வாசித்துக் காண்பித்தார்.

அதன் பின் அந்த வாத்தியத்தை எங்கும் பார்ததாக ஞாபகம் இல்லை.//


இதில் குறிப்பிட்டுள்ள அனேக வாத்தியங்கள் தற்போது பாவனையில் இல்லை...

வேத்தியன் on 15 March 2009 at 15:48 said...

// இராகவன் நைஜிரியா said...

// அவை பற்றி எழுத நினைத்ததன் பலன் தான் இந்தப் பதிவு...//

நல்ல நினைப்புங்க...//


அப்பிடியா???
அப்பிடின்னா சந்தோஷம் தாங்க...

இராகவன் நைஜிரியா on 15 March 2009 at 15:48 said...

கேரளாவில் இன்றும் நீங்கள் கேட்கும் பஞ்ச வாத்தியம் ..

கேட்பதற்கு மிக அழகாக இருக்கும்.

பஞ்ச வாத்தியத்தில்
தோற் கருவிகள்
துளைக் கருவிகள்
கஞ்சக் கருவிகள்

மூன்று விதமான வாத்திய கருவிகள் இருக்கும்.

நீங்கள் கேட்டதுண்டா

இராகவன் நைஜிரியா on 15 March 2009 at 15:50 said...

// வேத்தியன் said...

// இராகவன் நைஜிரியா said...

பஞ்சமுக வாத்தியம்...

திருவாரூர் கோயிலில் வைக்கப்பட்டு இருக்கும்.

சுமார் 20 வருடங்களுக்கு முன் அங்கு சென்று இருந்தபோது ஒரு வயதானவர் அதை வாசித்துக் காண்பித்தார்.

அதன் பின் அந்த வாத்தியத்தை எங்கும் பார்ததாக ஞாபகம் இல்லை.//

இதில் குறிப்பிட்டுள்ள அனேக வாத்தியங்கள் தற்போது பாவனையில் இல்லை...//

சரியாகச் சொன்னீர்கள். பல வாத்தியங்கள் இப்போ பாவனையில் இல்லைங்க..

வேத்தியன் on 15 March 2009 at 15:50 said...

// இராகவன் நைஜிரியா said...

கேரளாவில் இன்றும் நீங்கள் கேட்கும் பஞ்ச வாத்தியம் ..

கேட்பதற்கு மிக அழகாக இருக்கும்.

பஞ்ச வாத்தியத்தில்
தோற் கருவிகள்
துளைக் கருவிகள்
கஞ்சக் கருவிகள்

மூன்று விதமான வாத்திய கருவிகள் இருக்கும்.

நீங்கள் கேட்டதுண்டா//


நேரில் கேட்டதில்லை. டீ.வியில் பார்த்திருக்கிறேன்...

ஆதவா on 15 March 2009 at 17:52 said...

வேத்தியன்... என்ன திடீர்னு இசையில இறங்கிட்டீங்க???!!!

ஆதவா on 15 March 2009 at 17:53 said...

1. தோற் கருவிகள்
2. துளைக் கருவிகள்
3. நரம்புக் கருவிகள்
4. கஞ்சக் கருவிகள்

நமக்கெல்லாம் டப்பாங்குத்துக்கு போடற டப்பாவும் குச்சியும்தான்!!!!

ஆதவா on 15 March 2009 at 17:55 said...

ம்ம்ம்..

இதைப் படிக்கவே மலைக்குதே!! இசை ஞானிகளெல்லாம்.....

அய்யோ!! வேணாம் சாமி... நமக்கு இசையைக் கேட்கத்தான் தெரியும்!!!

நல்ல அருமையான பதிவு வேத்தியன்..

ஆதவா on 15 March 2009 at 17:59 said...

கமல் said...

இன்று தான் அநேக இசைக் கருவிகளை இப் பதிவினூடாக அறிந்துள்ளேன்.//////////


நானும்தான் கமல்..!!!!

பழமைபேசி on 15 March 2009 at 18:02 said...

நல்ல தகவல் நண்பா...

வேத்தியன் on 15 March 2009 at 18:18 said...

//ஆதவா said...
வேத்தியன்... என்ன திடீர்னு இசையில இறங்கிட்டீங்க???!!!//


ஒன்னுமில்ல சும்மா தான்...
:-)

வேத்தியன் on 15 March 2009 at 18:20 said...

//ஆதவா said...
1. தோற் கருவிகள்
2. துளைக் கருவிகள்
3. நரம்புக் கருவிகள்
4. கஞ்சக் கருவிகள்

நமக்கெல்லாம் டப்பாங்குத்துக்கு போடற டப்பாவும் குச்சியும்தான்!!!!//


நீங்களும் கிட்டத்தட்ட என்ன மாதிரி தான்...
:-)

வேத்தியன் on 15 March 2009 at 18:21 said...

// ஆதவா said...
ம்ம்ம்..

இதைப் படிக்கவே மலைக்குதே!! இசை ஞானிகளெல்லாம்.....

அய்யோ!! வேணாம் சாமி... நமக்கு இசையைக் கேட்கத்தான் தெரியும்!!!

நல்ல அருமையான பதிவு வேத்தியன்..//


நன்றி நன்றி...

வேத்தியன் on 15 March 2009 at 18:22 said...

// பழமைபேசி said...
நல்ல தகவல் நண்பா...//


நன்றி நன்றி...

Rajeswari on 15 March 2009 at 20:18 said...

கேள்விப்படாத பெயர்கள் நிறைய உள்ளன. அறிமுகப்படுத்தி வைத்ததிற்கு நன்றி வேத்தியன் சார்

வேத்தியன் on 15 March 2009 at 20:59 said...

// Rajeswari said...

கேள்விப்படாத பெயர்கள் நிறைய உள்ளன. அறிமுகப்படுத்தி வைத்ததிற்கு நன்றி வேத்தியன் சார்//


நன்றிங்க...
அது சரி, அது ஏங்க சார் எல்லாம்???
நான் நெம்ப சின்னப் பையனாக்கும்...
:-)

# * # சங்கப்பலகை அறிவன் # * # on 15 March 2009 at 21:14 said...

பார்க்க

வேத்தியன் on 15 March 2009 at 21:23 said...

// அறிவன்#11802717200764379909 said...

பார்க்க //


இதோ வரேன்...

Arasi Raj on 15 March 2009 at 23:39 said...

சும்மா ஒத்து ஊதாதன்னு சொல்லுவாங்களே....அது ஏங்க?

அருமையான பதிவு...இதுல சொல்லப்பட்டிருக்கிரா வாத்தியங்களை எங்கயாவது பாதுகாத்து வச்சுருக்காங்களா ?

Mahesh on 16 March 2009 at 01:15 said...

அருமையான பதிவு வேத்தியன்.....

ஜால்ரா .. இது தெரியாத ஆளே இருக்க முடியாது !!!

தேவன் மாயம் on 16 March 2009 at 06:13 said...

அப்ப நீங்களும் இசை ஞானம் அறிந்த வித்துவான் தான்?? உங்களிட்டையும் சங்கீதம் படிக்கலாம் போல இருக்கே?? ///
ஆமா நானும் கேக்கிறேன்.

தேவன் மாயம் on 16 March 2009 at 06:14 said...

இப்போ நம் மத்தியில் எவ்வளவோ இசைக்கருவிகள் பரந்து வந்துவிட்டன...
எவ்வளவு தான் வந்தாலும் நம் தமிழர் கலாச்சாரத்தையும் அதன் பின்னணியையும் பிரதிபலிப்பன நம் இசைக் கருவிகள் தானே ???///

நல்ல கருத்து..

தேவன் மாயம் on 16 March 2009 at 06:16 said...

குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் தமிழர் கலாச்சாரத்தோடு தற்போது தொடர்புடையவை எனினும், தமிழரால் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது சிறிது சந்தேகம் தான்...
விஷயம் ///
நாம் உபயோகிக்கிறோம்!!! அவ்வளவுதான்..

தேவன் மாயம் on 16 March 2009 at 06:17 said...

இதில் உள்ள நிறைய வாத்தியங்கள் நமக்குத்தெரியாது போல் உள்ளதே!

வேத்தியன் on 16 March 2009 at 06:38 said...

// நிலாவும் அம்மாவும் said...

சும்மா ஒத்து ஊதாதன்னு சொல்லுவாங்களே....அது ஏங்க?

அருமையான பதிவு...இதுல சொல்லப்பட்டிருக்கிரா வாத்தியங்களை எங்கயாவது பாதுகாத்து வச்சுருக்காங்களா ? //


ஒத்து என்பது பாட்டுக்கு ஏற்ப வாசிக்கப்படுவது. அதனால் யாராவது ஏதாவது சொன்னால் அதுக்கு ஆம் என்று சொல்லுதல் ஒது பாட்டுக்கு ஏற்ப இசைந்து கொடுத்தலைப் போன்றது.. அதான்...
:-)

வேத்தியன் on 16 March 2009 at 06:40 said...

// Mahesh said...

அருமையான பதிவு வேத்தியன்.....

ஜால்ரா .. இது தெரியாத ஆளே இருக்க முடியாது !!! //


வாங்க மகேஷ் அண்ணே...
நன்றி...
ஆமாங்க, சரிதான்...

வேத்தியன் on 16 March 2009 at 06:41 said...

// thevanmayam said...

அப்ப நீங்களும் இசை ஞானம் அறிந்த வித்துவான் தான்?? உங்களிட்டையும் சங்கீதம் படிக்கலாம் போல இருக்கே?? ///
ஆமா நானும் கேக்கிறேன். //


இசை எல்லாம் நன்கு அறிந்தவர்களிடம் பயில வேண்டுமுங்கோ...
என்னிடம் அல்ல...
:-)

வேத்தியன் on 16 March 2009 at 06:42 said...

// thevanmayam said...

குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் தமிழர் கலாச்சாரத்தோடு தற்போது தொடர்புடையவை எனினும், தமிழரால் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது சிறிது சந்தேகம் தான்...
விஷயம் ///
நாம் உபயோகிக்கிறோம்!!! அவ்வளவுதான்.. //


நீங்க சொன்னா சரிதான்...
:-)

வேத்தியன் on 16 March 2009 at 06:43 said...

// thevanmayam said...

இதில் உள்ள நிறைய வாத்தியங்கள் நமக்குத்தெரியாது போல் உள்ளதே! //


ஆமாங்க...
நானும் இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன்...

Anonymous said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

நசரேயன் on 16 March 2009 at 21:54 said...

எனக்கு பிடிச்சது ஜாலரா

Anonymous said...

என்னங்க வேத்தி!.... இத்தனை கருவிகள் உள்ளதா... ஆச்சரியமா இருக்கே!

மியூசிக்கல் கலெக்ஷன் ங்க :)

வேத்தியன் on 17 March 2009 at 09:07 said...

// நசரேயன் said...

எனக்கு பிடிச்சது ஜாலரா //


நிறைய பேருக்கு அது தான் பிடிச்சிருக்கு...
எனக்கும் தாங்க...
:-)

வேத்தியன் on 17 March 2009 at 09:08 said...

// ஷீ-நிசி said...

என்னங்க வேத்தி!.... இத்தனை கருவிகள் உள்ளதா... ஆச்சரியமா இருக்கே!

மியூசிக்கல் கலெக்ஷன் ங்க :) //


வாங்க ஷீ-நிசி...
ஆமாங்க...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.