Saturday, 14 March 2009

பாம்பைக் கண்டு பயப்படுறது "ஒபிடியோஃபோபியா"...


பாம்பைப் பாத்து பயப்பட்றத Ophidiophobiaன்னு சொல்லுவாங்க...
இது உலகத்துல இருக்குற Phobiaக்குள்ள பரந்திருக்குற ஒரு ஃபோபியா (One of the most widespread phobias in the world.)

எவ்வளவோ விஷமில்லாத பாம்புகள் இருக்கு நம்மைச் சுத்தி...
நாம அதையும் கண்டு பயப்பட்றோம்...
"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்"ன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க???
:-)

ஆனா, வலிமையான விஷமிருக்குற பாம்பு ஒன்னு கடிச்சா அந்த இடத்திலயே நாம டிக்கட் வாங்கிட்டு போக வேண்டியும் வரும் :-)))
அப்பிடிப் பட்ட வலிமையான விஷமுள்ள சில பாம்புகளை நாம இப்ப பாக்கலாம்...
ஓகே, ரெடி, ஸ்டார்ட் மியுசிக்...


Hook-nosed Sea Snake

தெற்காசியாவின் எல்லைப் பகுதிகளில் வாழும் இந்த 4 அடி பாம்பானது மிகவும் நச்சுத் தன்மையானதாம்...
ஆனாலும் இது மனிதர்களை எப்பவும் கடிக்கிறதில்ல...
ஆனா கடிச்சா, அதன் 1.5 மில்லி கிராம்கள் விஷம் போதுமாம் டிக்கட் வாங்க...
இதன் பிரதான இரை மீன் தானாம்...

Russell's Viper

இந்த 3-5 அடி நீளமுள்ள மஞ்சள்/மண்ணிறமுள்ள பாம்பானது பாகிஸ்தான்,இந்தியா,தென்கிழக்கு ஆசியா, சீனா ஆகிய நாடுகளில் அதிகம் இருக்குமாம்...
இதன் முக்கிய இரை சிறிய பூச்சிகள்...
ஆனா எலி,அணில் போன்றவற்றையும் உண்ணும்.
இது கடிச்சாந்த இடத்தில் வலி,வீக்கம்,இரத்தக் கசிவு ஏற்படும்.
மேலும் குருதி அமுக்கம் மற்றும் இதய அடிப்பு வீதம் ஆகியவற்றில் குறைவும் ஏற்படுமாம்...

Inland Taipan

சராசரியாக ஆறு அடி வரை நீளமுள்ள இந்த பாம்பானது அதிகமாக அவுஸ்திரேலியாவின் காய்ந்த பகுதிகளில் வாழும்...
இத ஒரு கடியில் மனிதனை கொல்லுவதற்குரிய 50 பகுதிகள் இருக்குமாம் (50 Lethal Human Doses)... எம்மாம் பெருசு???
ஆனா நம்ம நல்ல காலத்துக்கு அது மனுசனை கண்டா விலகி போயிடுமாம்...
இரையை பிடிக்கும் போது முதல்ல அதை கடிச்சு இரை இறக்கும் வரை பிடிச்சிருந்து அதுக்குப் பிறகு தான் அதை சாப்பிடுமாம்...
என்னா அறிவு இதுக்கு ???

Dubois's Sea Snake

இந்த மிக ஆபத்தான நீந்தும் பாம்பு அவுஸ்திரேலியாவின் தீவுகளான நியூ கினியா மற்றும் நியூ கலெடோனியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அதிகமாக இருக்குமாம்...
இது சரியான விஷ்முள்ள பாம்பாக இருந்தாலும் கடிக்கும் போது 0.1 மில்லி கிராம் விஷம் மட்டுமே வருமாம்...
இந்த அளவு ஒரு எலியை கொல்ல மட்டுமே போதுமானது. மனிதனைக் கொல்ல போதுமானதல்ல... (சந்தோஷமான விஷயம்...)

Eastern Brown Snake

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான இன்னொரு இனமான இந்த பாம்பு சராசரியாக 3-4 அடி நீளம் இருக்கும். ஆனா 6 அடி வரை வளரக் கூடியது...
இது கடிக்கும் போது சிறிய அளவு விஷம் மட்டுமே செலுத்தும்.
ஆனா, அதுவே எதிரியை உடனடியாகக் கொல்லுமளவு இருக்குமாம்...
எலி, முட்டை, சிறு முலையூட்டிகள்,தவளைகள் போன்றவற்றை உண்ணும்...

Black Mamba
ஆபிரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளிலிருந்து வரும் இந்த கொடிய பாம்பு பொதுவாக மஞ்சள்/பச்சை நிறமானது... இதன் பெயர் வாயின் நிறம் காரணமாக வந்ததாம்...
விரைவாக அட்டாக் பண்ணக் கூடிய பாம்பு...
சராசரியாக 8 அடி நீளம் இருக்குமாம். ஆனா 14 அடி வரை வளரக் கூடியது...
சிறிய முலையூட்டிகள், பறவைகள் என்பவற்றை இரையாக உண்ணுமாம்...
அதன் விஷத்தில் ரெண்டு துளிகள் தாக்கினால் மயக்கம்,விரைவான இதயத் துடிப்பு,ஆழமில்லாத சுவாசம்,மரணம் என்பன விளையும்...

Boomslang

ஆபிரிக்காவின் சவன்னா புல்நிலப் பகுதிகள் தான் இவைகளின் வாழிடம்...
சிறிய தவளைகள்,ஊர்வன,பறவைகள்,அவற்றின் முட்டைகள் என்பவற்றை உண்ணுமாம்...
இதன் சிறியளவு விஷம் மனிதனுக்கு மரணத்தை விளைவிக்கும்...
கடித்தவுடனே மயக்கம்,வெறுப்புத்தன்மை என்பன வரும்...
சிறிது நேரத்தில் டிக்கட் கிடைக்குமாம்...

Common Indian Krait

இந்த மிக மோசமான பாம்பு இந்தியா,பாகிஸ்தான் மற்றும் தெற்காசியாவில் அதிகமாக இருக்குமாம்...
சரியான சோம்பேறி. ஆனா, அலார்ம் அடிச்சா விரைவாக ப்ளான் பண்ணி எதிரியை அட்டாக் பண்ணுமாம்... (புத்திசாலி பாம்பு...)
இதன் சிறியளவு விஷம் நித்திரைத்தன்மை, சுவாச செயலிழப்பு என்பவற்றை தோற்றுவிக்குமாம்...
சிறிய நேரத்தில் டிக்கட் தான்...
சராசரியாக 4 அடி நீளமுள்ள இந்த பாம்பு சிறிய, பெரிய ஊர்வன, பாம்புகள் என்பவற்றை உண்ணும்...
தன் இனத்தை தானே உண்ணும் வழக்கும் இருக்கு இதுக்கு...

பாம்பைக் கண்டு பயப்படுறது "ஒபிடியோஃபோபியா"...SocialTwist Tell-a-Friend

23 . பின்னூட்டங்கள்:

த.அகிலன் on 14 March 2009 at 13:23 said...

அதென்ன ஓபிடியோ போபியோ.. இது பாம்பின்ர வாயுக்கயாவது போகுமா.. பேசாம ஓடியே போயிராலம் போலயிருக்கே..

thevanmayam on 14 March 2009 at 13:24 said...

பாம்பென்றால் படையும் நடுங்கும்!!

thevanmayam on 14 March 2009 at 13:25 said...

பாம்பைப் பாத்து பயப்பட்றத Ophidiophobiaன்னு சொல்லுவாங்க...
இது உலகத்துல இருக்குற Phobiaக்குள்ள பரந்திருக்குற ஒரு ஃபோபியா (One of the most widespread phobias in the world.)
//

ஆமா!

வேத்தியன் on 14 March 2009 at 13:25 said...

த.அகிலன் said...

அதென்ன ஓபிடியோ போபியோ.. இது பாம்பின்ர வாயுக்கயாவது போகுமா.. பேசாம ஓடியே போயிராலம் போலயிருக்கே..//

பாம்பின் வாயுக்குள்ள போகுமா என்றது சந்தேகம் தாங்க...
:-)))

thevanmayam on 14 March 2009 at 13:25 said...

பாம்பு படங்கள் அருமை!!

வேத்தியன் on 14 March 2009 at 13:26 said...

thevanmayam said...

பாம்பென்றால் படையும் நடுங்கும்!!//

ஆமா ஆமா...
உண்மை தான்...

வேத்தியன் on 14 March 2009 at 13:26 said...

thevanmayam said...

பாம்பு படங்கள் அருமை!!//

Googleக்கு நன்றிகள்...

thevanmayam on 14 March 2009 at 13:26 said...

மிக விசமான பாம்பு எது?

வேத்தியன் on 14 March 2009 at 13:28 said...

thevanmayam said...

மிக விசமான பாம்பு எது?//

இது தான்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது...
Black Mamba,Viper இனங்கள் எல்லாம் சரியான விஷமுள்ளவை...

வேத்தியன் on 14 March 2009 at 13:29 said...

http://www.huffingtonpost.com/2008/03/12/the-black-mamba-worlds-_n_91194.html

பார்க்கவும்...

வேத்தியன் on 14 March 2009 at 13:32 said...

thevanmayam said...

மிக விசமான பாம்பு எது?//

http://www.associatedcontent.com/article/207462/worlds_6_deadliest_snakes.html

பார்க்கவும்...

ஆதவா on 14 March 2009 at 13:37 said...

ஏங்க,, இப்படி உங்க வலைக்கு வரவங்கள பயமுறுத்திறீங்க...

பாம்புக்கும் எனக்கு பல தொடர்புகள் உண்டு!! எல்லாம் பயந்த அனுபவங்கள் தான்..

ஆதவா on 14 March 2009 at 13:38 said...

Ophidiophobia

இதென்ன.. வாயிலயே நுழையமாட்டேங்குது!! அட பாம்பைச் சொல்லலீங்க... பேரைச் சொன்னேன்.

ஆதவா on 14 March 2009 at 13:39 said...

Dubois's Sea Snake இதேமாதிரி எல்லா பாம்பும் இருந்திட்டா எவ்வளவு நல்லது.

ஆஸ்திரேலியாவிலதான் ஏகப்பட்ட பாம்புகள் இருக்கும் போல இருக்கே!!!

ஏம்பா கமல்... பார்த்து இருந்துக்கப்பா....

ஆதவா on 14 March 2009 at 13:40 said...

Common Indian Krait

தன் இனத்தை தானே உண்ணும் வழக்கும் இருக்கு இதுக்கு...


மனுச புத்தி!!! ஹி ஹி

வேத்தியன் on 14 March 2009 at 13:41 said...

ஆதவா said...

ஏங்க,, இப்படி உங்க வலைக்கு வரவங்கள பயமுறுத்திறீங்க...

பாம்புக்கும் எனக்கு பல தொடர்புகள் உண்டு!! எல்லாம் பயந்த அனுபவங்கள் தான்..//

வாங்க ஆதவா...
எல்லாம் சும்மா தாங்க...
நேக்கும் உண்டுங்கோ...

வேத்தியன் on 14 March 2009 at 13:42 said...

ஆதவா said...

Ophidiophobia

இதென்ன.. வாயிலயே நுழையமாட்டேங்குது!! அட பாம்பைச் சொல்லலீங்க... பேரைச் சொன்னேன்.//

வச்சவங்களைத் தாங்க கேக்கணும்...
:-)

வேத்தியன் on 14 March 2009 at 13:43 said...

ஆதவா said...

Dubois's Sea Snake இதேமாதிரி எல்லா பாம்பும் இருந்திட்டா எவ்வளவு நல்லது.

ஆஸ்திரேலியாவிலதான் ஏகப்பட்ட பாம்புகள் இருக்கும் போல இருக்கே!!!

ஏம்பா கமல்... பார்த்து இருந்துக்கப்பா....//

ஆமாங்க...
அவுஸ்திரேலியாவில் நிறைய இருக்கு...
கமல் கதி அதோ கதி தன்...
:-)

வேத்தியன் on 14 March 2009 at 13:44 said...

ஆதவா said...

Common Indian Krait

தன் இனத்தை தானே உண்ணும் வழக்கும் இருக்கு இதுக்கு...


மனுச புத்தி!!! ஹி ஹி//

சரியா சொன்னீங்க பாஸு...

கமல் on 14 March 2009 at 21:29 said...

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான இன்னொரு இனமான இந்த பாம்பு சராசரியாக 3-4 அடி நீளம் இருக்கும். ஆனா 6 அடி வரை வளரக் கூடியது...
இது கடிக்கும் போது சிறிய அளவு விஷம் மட்டுமே செலுத்தும்.
ஆனா, அதுவே எதிரியை உடனடியாகக் கொல்லுமளவு இருக்குமாம்...
எலி, முட்டை, சிறு முலையூட்டிகள்,தவளைகள் போன்றவற்றை உண்ணும்...//


நீர் என்ன மனுசன் அப்பா?
நானே இரவிலை பயந்து பயந்து தான் வேலைக்குப் போய் வாறது வேறை?

அதுக்கை நீர் வேறை என்ன பாம்பு..கீம்பு....
ஒஸ்ரேலியா என்று அறிக்கை வேறை?
நான் இஞ்சை நல்லா வாழுறது உமக்குப் பிடிக்கேல்லையோ?
சத்தியமா நான் இனி வீட்டு வாசலை விட்டு வெளிய இறங்கவே மாட்டேன்?


ஏன் உமக்கு வேறை பதிவு இல்லாமல் கமலைப் பயமுறுத்துறதுண்ணே முடிவு பண்ணிட்டீர்??

ஏன் என்னைப் பயமுறுத்துவதிலை உமக்குச் சந்தோசமோ?

கமல் on 14 March 2009 at 21:30 said...

கவனம் பார்த்துப் போம்....கொழும்பிலை சந்திக்குச் சந்தி பச்சைப் பாம்பும் கறட்டி ஓணானும் நிக்கும்?


வேத்தியா ஒஸ்ரேலியாப் பாம்பை விட உதுகள் தான் பொல்லாததுகள்?

கமல் on 14 March 2009 at 21:32 said...

வேத்தியா எனக்கும் உமக்கும் முன் ஜென்மத்திலை ஏதாவது பகை இருக்கே?

சும்மா ஒஸ்ரேலியாவிலை இருக்கிற பாம்பு அது இதென்று பயமுறுத்துறீர்???
ஐயோ கடவுளே?
வல்லிபுர ஆழ்வாரே???

வேத்தியன் on 15 March 2009 at 09:17 said...

@ கமல்...
நைனா, அது ஒன்னும் பெரிய விசயமில்ல...
பாம்பைக் கண்டதும் என்னை நெனைச்சுக் கோங்க...
பயம் எல்லாம் பறந்து போயிடும்...
வேணும்ன்னா இங்கா இருந்து ஒரு மந்திரிச்ச தாயத்து வாங்கி அனுப்பி விடுறன் ஓகே...
:-)))

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.